கேழ்வரகு கூழ் மிகவும் சுவையானது .நமது பாரம்பரிய உணவான கூழ் இன்னைக்கு பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது என்பதே பெருமைக்குரிய விஷயம் .இதற்கு மிக பெரிய காரணம் இதன் சத்துக்கள் என்பதே மறுக்க இயலாத உண்மை ...
இந்த தளத்திற்க்கு வருகை தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..... உங்கள் வரவு நல்வரவாகட்டும்......
லேபிள்கள்
- கோலங்கள் (409)
- கவிதைகள் (107)
- சமையல் (106)
- மெஹந்தி (62)
- side dish (38)
- கைவினைகள் (38)
- my clicks (24)
- ஓவியங்கள் (22)
- ஸ்நாக்ஸ் (15)
- wall painting (13)
- டிபன் (13)
- பொம்மை வேலைப்பாடு (7)
- சிந்தனை துளிகள் (4)
- வீடியோக்கள் (4)
breakfast லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
breakfast லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014
கேழ்வரகு கூழ் /ராகி கூழ் /ragi koozh /finger millet porridge
சனி, 30 ஆகஸ்ட், 2014
வரகு அரிசி உப்புமா/kodo millet upma/varagu arisi upma
வெள்ளி, 21 மார்ச், 2014
மிருதுவான இட்லி ( soft idli)
இட்லி தமிழ் நாட்டின் ஒரு அருமையான அடையாளம்னே சொல்லலாம் .குழந்தைகள்முதல் பெரியவர் வரை எல்லாருக்கும் இட்லி பிடித்த உணவாகவே இருக்கும் ..இதோ அதை எப்படி செய்யலாம் நு பார்க்கலாம்,...
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 4 டம்ளர் (IR20)
உளுந்து - 1 டம்ளர்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
உளுந்து நன்கு மைய வேண்டும். எடுக்கும் போது பஞ்சு போல பந்து பந்தாக வரவேண்டும் .
கிரைண்டரில் அரைத்தால் தான் இட்லி மிருதுவாக கிடைக்கும் .
புளித்த மாவை அதிகம் கிளறி விட்டால் கல் போன்ற இட்லி தான் கிடைக்கும்.
பிரிட்ஜில் இருந்து மாவை எடுத்த உடனே இட்லி ஊற்றக்கூடாது .இட்லி தட்டில் மாவை வைத்துகரண்டியால் தட்ட கூடாது .தட்டாமல் கரண்டி மாவை அப்படியே ஊற்றவும் .
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதித்த பின் இட்லி தட்டை வைத்து மூடி வேக விடவும் .
சில இட்லி தட்டில் மிகவும் குழியான வட்டங்கள் இருக்கும் அதில் ஊற்றும் இட்லி கல் போல தெரியலாம் .இட்லி குழிகள் மிகவும் குழியாக இல்லாமல் ,சிறிது ஏந்தலாக இருந்தால் மிருதுவாக , சாப்பிட எளிதாக இருக்கும் .
அரிசி அரைக்கும் போது கால் கப் சாதமும் (அன்றைய சாதம் தான் சேர்க்க வேண்டும் . முதல் நாள் செய்தது இல்லை )சேர்த்து , அரைத்தால் மிக மிக மிருதுவான இட்லி கிடைக்கும் .எந்த பயமும் இல்லாமல் இதை செய்யலாம்
இவற்றை கவனித்தாலே போதும் ,மிருதுவான இட்லி உங்கள் கையில் ...
தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 4 டம்ளர் (IR20)
உளுந்து - 1 டம்ளர்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
- முதலில் உளுந்து ,அரிசி இவற்றை 3 மணி நேரம் ஊற வைக்கவும் .
- பிறகு உளுந்தை கழுவி,வெந்தயத்துடன் சேர்த்து கிரைண்டரில் அரைக்கவும் .
- நன்கு உளுந்து மைய வேண்டும் .அவ்வப்போது சிறிது தண்ணீர் சேர்க்கலாம் .(எனக்கு கிட்ட தட்ட 40 நிமிடங்கள் ஆகிறது .உங்கள் கிரைண்டரை பொறுத்து நேரம் மாறுபடலாம் .)
- உளுந்து மாவு எடுத்தால் பந்து பந்தாக அழகாக வரும் அதுதான் பதம் .இப்போது மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் .
- பிறகு கிரைண்டரில் அரிசியை கழுவி போடவும் .அதனுடன் கல் உப்பு சேர்த்து அரக்கவும்.
- அவ்வப்போது தண்ணீர் விடவும் .அதிகம் தண்ணீர் விடவும் கூடாது .குறைவாகவும் தண்ணீர் விட கூடாது .குளிர்ந்த நீரை கூட விடலாம் .இது கிரைண்டர் ஓடும் போது மாவு சூடாகாமல் இருக்க உதவும் .
- அரிசி ரவை பதத்தை விட சற்று மைய அரைக்கவும் .
- பிறகு உளுந்து மாவு இருக்கும் அதே பாத்திரத்தில் எடுத்து இரண்டு மாவைவும் கைகளால் நன்கு கலக்கவும் .அதை ஒரு பத்திரத்தில் மாற்றி ,8 -10 மணி நேரம் புளிக்க விடவும் .நடுவில் அதை கிளற கூடாது .
- மாவு புளித்ததும் பொங்கி வரும் .அப்போது மாவை அதிகம் கிளறாமல் ஒரு பக்கமாகவே மாவை எடுத்து ,இட்லி தட்டில் ஊற்றி 10-15 நிமிடங்கள் வேகவிட்டு ,எடுக்கவும் .
- அவ்வளவுதான் சுவையான ,மிருதுவான இட்லி தயார் .
- கவனிக்க:
உளுந்து நன்கு மைய வேண்டும். எடுக்கும் போது பஞ்சு போல பந்து பந்தாக வரவேண்டும் .
கிரைண்டரில் அரைத்தால் தான் இட்லி மிருதுவாக கிடைக்கும் .
புளித்த மாவை அதிகம் கிளறி விட்டால் கல் போன்ற இட்லி தான் கிடைக்கும்.
பிரிட்ஜில் இருந்து மாவை எடுத்த உடனே இட்லி ஊற்றக்கூடாது .இட்லி தட்டில் மாவை வைத்துகரண்டியால் தட்ட கூடாது .தட்டாமல் கரண்டி மாவை அப்படியே ஊற்றவும் .
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதித்த பின் இட்லி தட்டை வைத்து மூடி வேக விடவும் .
சில இட்லி தட்டில் மிகவும் குழியான வட்டங்கள் இருக்கும் அதில் ஊற்றும் இட்லி கல் போல தெரியலாம் .இட்லி குழிகள் மிகவும் குழியாக இல்லாமல் ,சிறிது ஏந்தலாக இருந்தால் மிருதுவாக , சாப்பிட எளிதாக இருக்கும் .
அரிசி அரைக்கும் போது கால் கப் சாதமும் (அன்றைய சாதம் தான் சேர்க்க வேண்டும் . முதல் நாள் செய்தது இல்லை )சேர்த்து , அரைத்தால் மிக மிக மிருதுவான இட்லி கிடைக்கும் .எந்த பயமும் இல்லாமல் இதை செய்யலாம்
இவற்றை கவனித்தாலே போதும் ,மிருதுவான இட்லி உங்கள் கையில் ...
ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014
சனி, 1 பிப்ரவரி, 2014
அவல் உப்புமா (poha upma)
லேபிள்கள்:
அவல்,
குழந்தைகள்,
சமையல்,
டிபன்,
breakfast,
cooking,
easy recipe,
healthy
புதன், 22 ஜனவரி, 2014
ஞாயிறு, 24 நவம்பர், 2013
கோதுமை ரவை பாயசம் (wheat rava payasam )
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவா - 1/2 கப்
பால் - 2 கப்
சர்க்கரை - 3 ஸ்பூன்
உப்பு -சிறிது
ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை :
- முதலில் கோதுமை ரவையை வாணலில் பொன் நிறம் மாறும் வரை வறுக்கவும்.
- பாலை காய்ச்சி அதில் ,வறுத்த கோதுமை ரவையை சேர்த்து,வேகவிடவும் .
- அதனுடன் உப்பு சிறிது சேர்க்கவும் .
- கோதுமை ரவை வெந்தவுடன் ,அதில் சர்க்கரை,ஏலக்காய் தூள் சேர்த்து ,கிளறி 3 நிமிடங்கள் வேக விடவும் .
- அவ்வளவுதான் கோதுமை ரவை பாயசம் தயார் .
- இதில் நெய்யில் வறுத்த முந்திரியையும் ,சேர்த்து கொள்ளலாம் .
- சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்தும் செய்யலாம் .
- sending this to :
ஞாயிறு, 17 நவம்பர், 2013
கோதுமை ரவை புட்டு (wheat rava puttu )
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை - 1 கப்
சர்க்கரை - 2 ஸ்பூன்
ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - சிறிது
தேங்காய் துருவல் - கால் கப்
முந்திரி - 10
நெய் - 1 ஸ்பூன் +1 ஸ்பூன்
தண்ணீர் - 1 கப் +2 ஸ்பூன்
செய்முறை :
- முந்திரியை நெய்யில் வறுத்து தனியே வைக்கவும் .
- ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் , கோதுமை ரவை ,நெய் ,தண்ணீர் ,உப்பு சேர்த்து மைக்ரோவேவில் 6 நிமிடங்கள் வைக்கவும்.
- பிறகு அதனுடன் ,தேங்காய் துருவல் ,ஏலக்காய் தூள் ,சேர்த்து ,அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறவும்
- பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விட்டு பரிமாறவும் .
- மிகவும் சுவையான ,சத்தான புட்டு தயார் ...
- sending this to : http://nandooskitchen.blogspot.in/2014/01/south-indian-cooking-event.html?showComment=1390028986183
- http://anuzhealthykitchen.blogspot.in/2012/07/south-indian-kitchen-series-event-1.html
and
திங்கள், 11 நவம்பர், 2013
ரவா தோசை (rava dosa)
லேபிள்கள்:
சமையல்,
டிபன்,
breakfast,
cooking,
easy recipe
சனி, 9 நவம்பர், 2013
செவ்வாய், 29 அக்டோபர், 2013
புதன், 23 அக்டோபர், 2013
செவ்வாய், 7 மே, 2013
முள்ளங்கி சப்பாத்தி (radish chappathi )
தேவையான பொருட்கள் :
முள்ளங்கி -1
கோதுமை மாவு - 1 கப்
மிளகாய் தூள் -1 ஸ்பூன்
சீரக தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
எண்ணெய் -சிறிதளவு
மல்லிதழை - சிறிது
செய்முறை :
முதலில் முள்ளங்கியை தோல் சீவி துருவிக்கொள்ளவும் ...
அதை 1௦ நிமிடம் அப்படியே விடவும்
பிறகு முள்ளங்கியை பிழிந்தால் அதில் இருந்து சாறு வரும் அதை எடுத்து வைக்கவும்
அதை தனியே எடுத்து வைக்கவும்...
இப்போது கோதுமை மாவுடன் உப்பு,எண்ணெய்,முள்ளங்கி சாறு,சிறிது தண்ணீர் கலந்து மாவை பிசையவும்.
இப்போது வாணலில் எண்ணெய் விட்டு பிழிந்த முள்ளங்கி ,கரம் மசாலா ,சீரக தூள் ,உப்பு ,மிளகாய் தூள்,மல்லிதழை சேர்த்து வதக்கவும்
பின்னர் சப்பாத்தி போல உருட்டி (கொஞ்சம் மொத்தமாக ) அதனுள் முள்ளங்கி மசாலாவை வைத்து மூடி அதை சப்பாத்திகளாக உருட்டவும்
உருட்டிய சப்பாத்திகளை தோசைக்கல்லில் சுட்டு எண்ணெய் தடவி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும் ...
இப்போது முள்ளங்கி சப்பாத்தி தயார் ..
முள்ளங்கி சாப்பிடாத குழந்தைகளுக்கு இதுபோல கொடுக்கலாம்
பயன்கள் :
முள்ளங்கி சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்கும் ..
உடலுக்கு குளிர்ச்சி தர கூடியது ..பசியை தூண்டும் ..
வயிறு சமந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் ...
thanks to :
http://www.arusuvai.com/tamil/node/25420
sending this to :
திங்கள், 29 ஏப்ரல், 2013
easy wheat dosa...
லேபிள்கள்:
சமையல்,
டிபன்,
வீடியோக்கள்,
breakfast,
cooking
செவ்வாய், 5 மார்ச், 2013
கம்பு கூழ் (tasty and healthy millet porridge ....)
திங்கள், 18 பிப்ரவரி, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



