புதிதாய் , அதுவும் சத்தான டிபன் செய்யலாம் வாங்க ...
சுரைக்காயில் அடை எல்லோருக்கும் பிடிச்சு விடும் . அதன் மணம் சாப்பிட தூண்டும் .மிகவும் சத்தானதும் கூட ,...
எல்லோரும் சாப்பிடலாம் .
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி -1 கப்
பருப்புகள் -3/4 கப் (பயத்தம்பருப்பு ,கடலைபருப்பு கலந்தது )
துவரம்பருப்பு -1 ஸ்பூன்
மிளகாய் -3 (உங்கள் காரத்துக்கு ஏற்ப சேர்த்து கொள்ளலாம் )
சோம்பு -1 ஸ்பூன்
இஞ்சி-1 இன்ச் அளவு
பூண்டு -7 பல்
வெங்காயம் -5
மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -தாளிக்க
தாளிக்க :
சீரகம் -1 ஸ்பூன்
பல்லாரி -1 (பொடியாக நறுக்கியது )
கருவேப்பிலை -2 கொத்து
பெருங்காயம் -சிறிது
செய்முறை :
முதலில் அரிசி மற்றும் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
சுரைக்காயை பொடியாக நறுக்கவும் .
அரிசி ,மிளகாய் உப்பு சேர்த்து அரைக்கவும்
பிறகு பருப்பு ,வெங்காயம் ,இஞ்சி ,பூண்டு, சோம்பு ,சுரைக்காய் சேர்த்து அரைக்கவும்
பிறகு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து ,அதில் கலக்கவும் ,அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்
அரைத்த மாவை கலந்து தோசை மாவு போல கரைத்து கொள்ளவும் (மிகவும் நீர்க்கவோ ,அல்லது கெட்டியாகவோ இருக்க கூடாது )
தோசை கல்லை சுட வைத்து ,அதில் மாவை ஊற்றி தோசை போல வார்க்கவும் .சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பி போட்டு எடுக்கவும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....