எல்லா குழந்தைகளுக்கும் ,டெடி பியர் ரொம்ப பிடிக்கும்... ஏன் பெரியவங்களுக்கும் கூட... அதை நாமே செய்ய கத்துகிட்டா அதை கிப்ட்டா கொடுத்து எல்லோரையும் அசத்தலாம் ... நிறைய பேர் என்கிட்ட டெடி பொம்மை செய்முறை கேட்டு இருந்தாங்க ... கைவசம் இருந்த துணியை வைத்து இதை தயாரித்தேன் .. நாங்க கிராமத்தில் இருப்பதால் இதற்கு தேவையான பொருட்களை வெளியூரில் அதுவும் தேடி தேடி வாங்க வேண்டிய நிலை ... பாருங்க பொம்மைக்கு கண் கிடைக்கல்ல ..அதான் சிம்பிளா கிடைத்த கண்ணை வைத்து அலங்கரித்தேன் ...நான் கிளாஸ் எதுவும் போகல ... எனக்கு தெரிந்தவரை சொல்லி தருகிறேன் ....
தேவையான பொருட்கள் :
கவனம் :குழந்தைகள் அருகில் வைத்து இதை செய்ய வேண்டாம் .பாலிஸ்டர் பஞ்சு ,மற்றும் வெட்டிய துணியின் சிறு சிறு பகுதிகள் குழந்தைக்கு ஆபத்தை உண்டாக்கும் . செய்த உடன் சுத்தம் செய்யவும் .
craft பொருட்கள் கிடைக்கும் கடைகளிலே சுலபமாக இதன் cuttings கிடைக்கும் .. அதிலே செய்முறையும் சேர்ந்து இருக்கும் .அதற்கு தேவையான துணி ,உள்ளே அடைக்கும் பாலிஸ்டர் பஞ்சு,கண் ,மூக்கு பற்றி சந்தேகம் இருந்தால் கடைகாரரின் உதவியை நாடலாம் . அதே போல அவரிடமே இதற்க்கான ஊசி ,நூல் இவைகளையும் வாங்கிக்கொள்ளவும் .
நான் சிறிய அளவு டெடி செய்ததால் சிறிய கண்கள் , மூக்கு வைத்தேன் . உங்கள் பொம்மையின் அளவுக்கு ஏற்ப கண்கள் மற்றும் மூக்கை வாங்கவும் .
felt cloth (2 colours )- 1/4 மீ
கண்கள் - 2 (சிறியது)
மூக்கு - 1 (சிறியது )
பாலிஸ்டர் பஞ்சு - 100 g
சாடின் ரிப்பன் - 1/4 m
ஊசி -1
நூல் - தேவைக்கு (சிறிது மொத்தமான ,தரமான நூல் அவசியம் )
செய்முறை :
பொதுவாக teddyன் நிறத்தை டார்க்காக எடுத்தால் ,கை ,கால் ,மூக்கு காது இவற்றை light கலரில் எடுக்கலாம் .அல்லது teddyன் நிறம் light ஆக தேர்ந்தெடுத்தால் , அதன் கை ,மூக்கு ,காது ,கால் இவற்றுக்கு dark நிறம் தேர்ந்தெடுக்கவும் .
- படத்தில் உள்ளது போல ,cuttings சை எடுத்துக்கொள்ளவும் . அதனை felt துணியில் பின் பக்கம் திருப்பி , எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெருக்கமாக வரைந்து கொள்ளவும் .(தள்ளி தள்ளி வரைந்து வைத்தால் , துணி நிறைய வேஸ்ட் ஆகி விடும் .
- கை ,காது ,மூக்கு ,கால் பகுதியில் வைக்க வேறு நிற துணியில், வரைந்து கொள்ளவும் .cuttingsல் ஒரு பக்கம் மட்டும் கொடுத்து இருப்பாங்க . நாம cuttingsசை திருப்பி மறுபக்கத்தை துணியில் வரைந்து கொள்ள வேண்டும் .(நான் cuttingsசில் இருந்த பக்கத்தை 1 எனவும் ,மறுபக்கம் திருப்பி வரைந்த பக்கத்தை 2 எனவும் குறித்துக்கொண்டேன் .)
முதலில் காது1,2 பகுதியை தைக்கவும் .காது மட்டும் 4 வெட்ட வேண்டும் .ஒவ்வொரு முறை தைக்கும் போதும் , அங்கங்கே குண்டூசிகளை வைத்தால் ,தைக்கும் போது சிரமம் இருக்காது .
பட்டன் ஹோல் முறையில் தைக்கவும் .இறுதியில் முடிச்சு போட்டு வைக்கவும் .
- பிறகு ,காதுகளை முகத்தோடு இணைத்து பின் முகத்தின் பக்கவாட்டு பகுதிகளை இணைக்கவும் . அதனுடன் மூக்கு பகுதியை இணைக்கவும் .
- அதே போல முகத்தின் பின் பகுதியையும் இணைக்கவும் .பிறகு முகத்தின் பின் , முன் பகுதிகளை சேர்த்து தைக்கவும் .இபோது முகம் தயார்.
- டெடியின் வயிற்றுப்பகுதி 1,2 ஐதைக்கவும். அதுபோல முதுகுப்பகுதி 1,2 ம் தைக்கவும் .
- வயிற்றுப்பகுதியுடன் கை ,மற்றும் கால் இவற்றை சேர்க்கவும் .அதுபோல முதுகுப்பகுதியுடன் கை மற்றும் கால் இவற்றை சேர்க்கவும் . இறுதி படத்தில் பார்க்கவும் .அதேபோல வரும் .
- பிறகு ,வயிறு ,முதுகுஎல்லாம் சேர்த்து ,இணைக்க வேண்டும் .இவற்றை இணைத்தால் மேலே உள்ள கடைசி படம் போல வரும் .அதனை கவனமாக அப்படியே திருப்பவும் . அதனுள் பாலிஸ்டர் பஞ்சை திணிக்கவும் .கை ,கால் எல்லா இடத்திலும் திணிக்கவும் .(நிறைய பஞ்சு திணித்தால் நீண்ட நாள் உழைக்கும் .)
- அதேபோல முகத்தின் மூக்கு பகுதியில் மூக்கு வைக்க ,மூக்கு பகுதியில் மூக்கு வைக்க வேண்டிய இடத்தில் ,மிக சிறு துளை இட்டு அதில் மூக்கை பொருத்தவும் .அதுபோல கண்ணும் பொருத்தவும் . (ஓட்டும் கண் வைப்பதாய் இருந்தால் ,கடைசியாக வைக்க வேண்டும்.நான் இங்கு ஓட்டும் கண்ணை பொருத்தியுள்ளேன் ) .
- இப்போது முகத்திலும் பஞ்சை திணிக்கவும் . இப்போது முகம் ,மற்றும் உடல் இவற்றை கவனமாக பொருத்தவும் . (சிறிது சிரமம் தான் )
- அவ்வளவுதான் இனி ஓட்டும் கண் வைப்பதாய் இருந்தால் ஒட்டலாம் .நான் இப்போது தான் கண்ணை ஓட்டினேன் .
- பிறகு சாட்டின் ரிப்பன் கொண்டு முடிச்சு போட்டு நடுவில் ஸ்டோன் ஒட்டவும் .அவ்வளவுதான் உங்களுக்கே சொந்தமான டெடி தயார் .
- இதே முறையில் fur துணியிலும் செய்யலாம் . ஆனால் வெட்டும் போது cuttings ல் இருக்கும் அம்புகுறிக்கு ஏற்ப வெட்ட வேண்டும் .
- உங்கள் அன்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் . நன்றி .....
அன்பு தமிழ் உறவே!
பதிலளிநீக்குவணக்கம்!
இன்றைய வலைச் சரத்தின்,
திருமதி R..உமையாள் காயத்ரி அவர்களின்
வலைச்சரத்தில் - ஒரு - கதம்ப - மாலை.
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகள்!
வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)
சங்கீதா உன்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும். http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_8.html
பதிலளிநீக்கு