பனீர் பட்டாணி மசாலா நால்லா வந்து இருந்தது . நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன் ...
தேவையான பொருட்கள் :
பனீர் - 1 கப் (வெட்டியது )
பட்டாணி - 1/2 கப்
பால் - 3 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1(பொடியாக நறுக்கவும் )
பச்சை மிளகாய் - 1
சீரகம் - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித்தழை - சிறிது
உப்பு - தேவைக்கு
அரைக்க :
பெரிய வெங்காயம் - 1(நறுக்கியது )
தக்காளி - 3
பட்டை - 1 சிறிய துண்டு
கிராம்பு - 1
எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை :
- வாணலில் எண்ணெய் விட்டு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வதக்கி அரைத்துக்கொள்ளவும் .
- பட்டாணியை வேகவைத்து எடுத்த்க்கொள்ளவும் .
- பனீர் துண்டுகளை தோசைக்கல்லில் ,எண்ணெய் சிறிது விட்டு டோஸ்ட் செய்து கொள்ளவும் .
- பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு , சீரகம் போட்டு வெடித்ததும் ,வெங்காயம் , பச்சைமிளகாய் ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் .
- அதனுடன் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும் .அதனுடன் மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் ,மஞ்சள்த்தூள் ,உப்பு சேர்த்து 3-5 நிமிடங்கள் வதக்கவும் .
- பின் அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து ,5 நிமிடங்கள் கொதிக்கவிடவும் .
- பிறகு அதில் பால் சேர்த்து கொதிக்கவிடவும் . அதில் பட்டாணி ,பனீர் சேர்த்து கிளறி மல்லித்தழை தூவி இறக்கவும் .
- அவ்வளவுதான் சுவையான பனீர் பட்டாணி மசாலா தயார் .இது சப்பாத்தி ,ரொட்டிக்கு சுவையாக இருக்கும் .
பனீர் பட்டாணி மசாலா சப்பாத்தியுடன் சேர்த்திருப்பது அருமை.
பதிலளிநீக்கு