திங்கள், 19 மே, 2014

மெட்டி (சித்திரம் பேசுதடி எனும் முகநூல் கவிதை நிகழ்ச்சியில் வெளி வந்தது )

நமது கவிதை எழுதும் திறனை ஊக்குவிக்கும் வகையில் சித்திரம் பேசுதடி  எனும் முகநூல் பக்கத்தில் , ஒவ்வொரு வாரமும் ஒரு படம் கொடுத்து,அதற்கு ஏற்ப கவிதைகளை வாசகர்கள் அனுப்ப சொல்வார்கள் . சிறந்த கவிதைகளை அவர்கள் தேர்ந்து எடுத்து , அதை ஒலி வடிவமாக நமக்கு வெளியிடுவார்கள் .. அந்த வகையில் இந்த வாரம் வெளிவந்த படத்துக்கு எனது கவிதை இது ... அதன் ஒலி வடிவமும் , இணைக்கின்றேன் அதை கேட்க இங்கே சொடுக்கவும். இதே போல நீங்களும் கவிதைகளை அனுப்பி பயன் பெறுங்கள் .. நன்றி

இந்த கவிதையை வெளியிட்ட சித்திரம் பேசுதடி குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ...

விரல்களுக்கிடையே வீணை போல
என் கரங்களுக்கிடையே
காதல் சொல்ல ,
காத்திருக்கு
இந்த மெட்டி ...

உன்னை அன்பாய் காக்க ,
உன் கொலுசிட்ட
கால்களுக்கு
கிரீடம் சூட்டிடும்
இந்த மெட்டி .....

திருமண பந்தத்தில்
சொந்தம் ஒன்று
புதிதாய் சேர ,
சேதி சொல்லும்
இந்த மெட்டி ....

உன் முடிமுதல்
அடிவரை ,
எனக்கே என்று
எழுதித் தந்த
திருமண சாசனத்தின்
கையெழுத்தாக
இந்த மெட்டி ...

உனக்கே உனக்காய் ,
சமர்பிக்கிறேன்
என்னையும் ,
இந்த மெட்டியையும் ...

2 கருத்துகள்:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    பொழுது போகிறது!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Enjoy this page? Like us on Facebook!)