my clicks லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
my clicks லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஏப்ரல், 2018

my clicks 24

மிகவும் விரும்பி ரசித்த தருணங்களை, இந்த புகைப்படங்கள் வாயிலாக  உங்களுடன் பகிர்கிறேன்.

சிறு வயது முதல் இன்று வரை , ரசித்து ரசித்து பிரமித்துப்போன என்றும் தன் கம்பீர அழகை இழக்காமல் ,பிரமாண்டமாய் நிற்கும் கங்கை கொண்ட சோழபுரத்தின் கோபுர அழகு .....
 இருளை கிழித்து ,தன் மெல்லிய ஓளியை இதமாக பரப்பிச் சிரிக்கும் மெழுகுவர்த்தியின் அழகு ....
 காட்டுமன்னார்கோவில் வீர நாராயண பெருமாள் சன்னதியின் கோபுர அழகு ...

வியாழன், 1 பிப்ரவரி, 2018

my clicks 23

     வர்ணங்கள் எல்லா இடத்திலும் அழகு ..இயற்கையிலும் ,பொருட்களிலும் வர்ணங்கள் செய்த ஓவியங்கள் இங்கே ...
இன்னும் இதழ் திறக்கா செம்பருத்தி மொட்டு ....

வர்ணங்கள் பூசும் தூரிகைகள் ,வானவில் செய்ய, கூடிக் கதைகள் பேசி களித்திருக்கும் வேளை எடுத்தது ....



கற்பூர வள்ளி இலைகள் ஏனோ ரோஜாவைபோல் வேடமிட்டு துளிர்க்கும் அழகில் லயித்த போது ,எடுத்தது ...(zoom செய்து இதழ்களை பார்க்கவும் )

சனி, 2 டிசம்பர், 2017

my clicks 22

சில பொருட்கள் கூட காதலை பிரதிபலிக்கும் பிம்பமாகிப் போகிறது .... இதோ என்னை கவர்ந்த சில பிம்பங்கள் ....



எனது மோதிரத்தின் பிம்பமாக உன் இதயம் .........


ஜிமிக்கி கம்மல் ஜோடிக் கிளிகள் .......


you and I ..... நீயும் நானும் .....

சனி, 4 நவம்பர், 2017

My clicks 21

நான் ரசித்த மனம்  வருடும் நிமிடங்கள் இந்த மயிலிறகும் ,மலர்களும் உங்களுக்காக இங்கே ...
வர்ணங்கள் எல்லாம் சேர்ந்த தூரிகையாய் இந்த மயிலிறகுகள் ......
மழை மாலைப்பொழுதை வரவேற்க இந்த  மலர்களும் ,மொட்டுகளும்  .....

இரட்டை ரோஜாக்கள் இனிப்பாய் மலர்ந்த தருணம் .....

புதன், 4 அக்டோபர், 2017

my clicks 20

மேகங்களை சுமந்த வானங்கள் ...ஒவ்வொரு தருணத்திலும் அத்தனை அழகு ... இங்கே என் பார்வையில் பட்ட வானங்கள் ....
பந்துகளை போல அடுக்கிவைத்த மேகங்கள் ....அதை பிரதிபலிக்கும்  உப்பளங்கள் ... தூத்துகுடி வழியே  பயணத்தின் போது ,எடுத்தது .. 

 அடை மழைக்கு தயாராய் ...... அடர்ந்து கருத்த மேகங்கள் ...
மாலை வேளை ஒன்றில் வானவில் வந்து வாசல் பக்கம் வணக்கம் சொல்லிய தருணம் ....

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

my clicks 19

 வாழ்வில் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிக்க தெரிந்தால் இனிமையாகும் .சில சிறிய விஷயங்கள் இங்கே இத்தனை அழகை தாங்கி ,உங்கள் கண்களுக்கு விருந்தாக இந்த படங்கள் ....

வாழைப்பூவில் சிதறிக்கிடக்கும் வைர முத்துக்கள் ... zoom செய்து பார்க்கவும் .
மனதை கவர்ந்த மனத்தக்காளி பூக்கள் .....
பூக்கள் மட்டுமா அழகு இலைகள் கூட புது அழகு ....

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

my clicks 18

கோடை விடுமுறைக்கு கொடைக்கானல் சென்ற போது ,இயற்கையின் கொடையை கண்களால் ரசித்து ,கேமராவில் பதித்து ,இங்கே உங்களின் பார்வைக்கும் பகிர்வதில் மகிழ்கிறேன் ....
மலர் கண்காட்சியில் என் மனம் கொத்திப்போன பூக்கள் ,இதோ உங்களுக்கும் ......


இதன் முழு அழகை ரசிக்க இந்த படத்தை  zoom செய்து பார்க்கவும் .சட்டென பார்க்க அயல்நாட்டின் ஓவியத்தை ஒத்த அழகிது  ...


பூக்களின் அரசி புன்னகை பூக்க ,கண்கவர் நிறத்தில்வீற்றிருக்கும் அழகை பாருங்கள் ...

ஞாயிறு, 21 மே, 2017

My clicks 18

புகைப்படங்கள் நம் வாழ்வின் சில முக்கிய தருணங்களை தாங்கி நிற்கும் ..எனக்கும் இந்த புகைப்படங்கள் அது போலத்தான் சில நெகிழ்வான நிமிடங்கள் சுமந்து இங்கே உங்களுக்காக .....
மஞ்சள் நிற மலரொன்று மனம் வருடிப்போன சமயம் எடுத்தது
எங்கள் வீதி பிள்ளையார் கோவிலின் கம்பீர அழகு...மஞ்சள் நிற மலரொன்று மனம் வருடி போகும் சமயம் எடுத்தது

எங்களோடு சில காலம் வாழ்ந்த
சின்னஞ்சிறு குருவிகளின் நினைவுப்பெட்டகமாய் இந்த நிழல்படம் ...

புதன், 1 பிப்ரவரி, 2017

my clicks 17

இயற்கையின் நன்கொடைகள் இங்கே சில ...
 
பொன்வண்டு சிறுவயதில் பார்த்தது .மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பார்த்த போது  கிளிக்கியது .

இதயம் மரமானதோ ? மரம் இதயமானதோ? என எண்ண வைத்த தருணம் எடுத்தது . கூடவே சிரிக்கும் வெள்ளை நிலா  அழகு .எதேச்சையாக போகும் வழியில் கண்டது .
மாலை வெயில் ஓய்வெடுக்க இந்த ரோஜாவின் மேல் படர்ந்த நேரம் எடுத்தது .


செவ்வாய், 1 நவம்பர், 2016

my clicks 15


நம் இயந்திர வாழ்வின்ஒ வ்வொரு நாளும் நம்மை அறியாமல் பல அழகிய நொடிகளை கடந்திருப்போம்.... நாம் ரசிக்க மறந்த சில காட்சிகள்இப்போதாவது இங்கே  

பிள்ளையார் எத்தனை வடிவம் கொடுத்தாலும் அழகாகவே இருப்பார் ..பிடி மண் முதல் மஞ்சள் பிள்ளையார் வரை எல்லாமே அழகு இவரிடம் ...வித விதமாய் பிள்ளையார் சிலைகள் எங்கள் வீட்டில் ....அதில் ஒன்று இதோ இங்கே ..


பாகற்காய் பூக்கள் அச்சின்னசிறு எறும்பிற்கும் விருந்தளிக்கிறதோ ....



புற்களுக்கு இடையே மலர்ந்த வெண்தாமரை போல மலர்ந்திருக்கும் இவள் யாரோ ....

சனி, 1 அக்டோபர், 2016

my clicks 14

இயற்கையின் அழகை ரசிக்க , சின்ன சின்ன நிகழ்வுகளிலும் ரசிக்கலாம்

ஒரே செடியில் மலர்ந்த இரு வண்ண மலர்கள் .. அத்தனை அழகையும் இந்த சின்னஞ்சிறு பூக்கள் சுமந்து சிரிப்பதை பாருங்கள் ..
மலேசிய பயணத்தில் திடீரென பெய்த மழை துளிகள்  எங்கள் வாகன கண்ணாடியில் இட்ட முத்துக்கோலம்
அமைதியின் மொத்த உருவமாய் இந்த புத்தர் சிலை ...பார்க்கும் நம் மனதையும் சாந்தமாக்கும் ....

சனி, 30 ஜூலை, 2016

My clicks 13

 எங்கள் பயணங்களின் மறக்க இயலா நொடிகளை சுமந்து ,இன்னும் பிரமாண்டமாய் இந்த படங்கள்...
மலேசியா முருகன் கோவில் முகப்பை அலங்கரிக்கும் இந்த முருகன் சிலையின் தத்ரூப அழகு,என் சின்னஞ்சிறு கேமராவிலும் இன்னும்  கம்பீர அழகாய் ... 

சிங்கப்பூரின் Holiday Inn hotel- ன் வரவேற்பரை எல்லா தளங்களும் ஒருங்கே சுமந்து பிரமாண்டமாய்...
சிங்கப்பூர் Giant wheel இரவின் இருளை இந்த வண்ண வண்ண விளக்குகள் இன்னும் அழகாக்கி கம்பீரமாய்...


திங்கள், 30 மே, 2016

My clicks 12

.கோடை மழையின் கொடையாக இந்த படங்கள் ...இவை அனைத்தும் மொபைலில் எடுத்தவை
மழையில் நனைந்த splender bikeகின் பின் பக்க கைப்பிடி ...


மழையில் உதிர்ந்து மண்ணை முத்தமிட்ட மலர் ...

மழை நீர் இலைகளில் சறுக்கி விளையாடும் காட்சி ...



வெள்ளி, 13 மே, 2016

My clicks 11

நாம் ரசிக்க, இந்த உலகில் எண்ணற்ற விஷயங்கள் கொட்டிக்கிடக்கிறது...அப்படி நான் ரசித்த ,ரசிக்கும் சில இங்கே.....
எனது பயணங்களில் பெரும்பாலும் நான் ரசிப்பது இவரைத்தான் ..
 அந்தி சாயும் நேரம் .... வானில் வண்ணக்கோலம் ... 

 ,எங்கள் வீட்டு பால்கனியை அழகாக்கிய மலர் ...

வியாழன், 25 பிப்ரவரி, 2016

my clicks 10


வண்ணங்களும் ,எண்ணங்களும் சேரும் போது ,புதிதாய் உணர்வோம் ..அப்படி உணர்ந்த தருணங்களில் கிளிக்கியது ...

மிகவும் ரசித்த pic இது .மஞ்சள் ,குங்குமத்தின் மங்கள வண்ணமும் ,தாமரையில் வீற்றிருக்கும் லட்சுமியின் கம்பீர தோற்றமும் ,இதன் அழகை மேலும் கூட்டுது ..
எங்கள் அன்பின் அடையாளமாய் எடுத்தது ..
டிவி remote எதேச்சையாக எளிமையாக ஒரு click




செவ்வாய், 15 டிசம்பர், 2015

my clicks 9


இயற்கை அளித்த அழகை ஒவ்வொரு சின்ன விஷயங்களிலும் காணலாம் .இதோ நீங்களும் ரசிக்கலாம் வாங்க 
மாங்கனி பூக்கள் சூரியனுக்கு வணக்கம் சொல்லி சிரிக்கும் அழகை பாருங்கள் 

மழையில் நனைந்த ரோஜாவின் அழகு

குண்டுமணிகள் போல காட்சி தரும் மணதக்காளி 


திங்கள், 26 அக்டோபர், 2015

my clicks 8




இவை எல்லாமே எனது phone கொண்டு எடுத்தவைகள் தான் ... ஒரு ரோஜா மலரின் மொட்டு முதல் பூ வரை எடுத்து இருக்கிறேன் ..
இந்த  மொட்டை மூடி இருக்கும் இதழ்களின் ஓரங்கள்  வெண்ணிறமாக இருப்பதை பாருங்கள் ... அத்தனை அழகு ...
அடுத்த நாள் எடுத்தது இதழ்களை விரித்து புன்னகைக்கும் தருணம் எடுத்தது ...

இதோ முழுதும் மலர்ந்த பூக்களின் ராணி ..... மகுடம் சூடி சிரிக்கும் அழகை பாருங்கள் ...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...