செவ்வாய், 6 மே, 2014

ரவா கேசரி (rava kesari )

எல்லாருக்கும் பிடித்த ஒரு இனிய ரெசிபி ரவா கேசரி . செய்வது மிக மிக சுலபம் . 

தேவையான பொருட்கள் :

ரவா - 1/2 கப் 
சர்க்கரை - 1/2 கப் 
நெய் - 4 ஸ்பூன் 
தண்ணீர் - 1 கால் கப் 
சிவப்பு கலர் பவுடர்  - சிறிது  
முந்திரி - 5 
ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன் 

செய்முறை :

  • முதலில் நெய் விட்டு முந்திரிகளை வறுத்து தனியே வைக்கவும்.
  • அதே வாணலில் ரவையையும் சில நொடிகள் வறுத்துக்கொள்ளவும் .
  • அதே சமயம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும் .
  • கொதிவரும் சமயம் , இந்த வறுத்த ரவையுடன் சேர்த்து , கலர் பவுடர் சேர்த்து ,கட்டி இல்லாமல் கிளறவும் .பின் மூடி  1நிமிடம் வேகவிடவும் . 
  • ரவை வெந்த பிறகு ,சர்க்கரை சேர்த்து ,கிளறவும் . விருப்பப்பட்டால் வாசனைக்கு மேலும் சிறிது நெய் சேர்க்கலாம் . 
  • இறுதியாக ,வறுத்த முந்திரிகளை சேர்த்து , கிளறி இறக்கவும் 
  • sending this to :
  • http://zestysouthindiankitchen.com/favorite-recipes-event
  • http://mykitchenodyssey.blogspot.fr/2014/04/favourite-recipes-event-announcement.html
  • and 
  • http://gayathriscookspot.blogspot.in/#

7 கருத்துகள்:

  1. Oh parkumpothe arumaiya iruku .Favourite recipe event-il inaithamaiku nandri tholi

    பதிலளிநீக்கு

  2. வணக்கம்!

    கேசாியை கண்டு கிளா்ந்தெழும் ஆசையினால்
    பேச வருமோ பேசு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு

  3. வணக்கம்!

    கேசரியைக் கண்டு கிளா்ந்துாறும் நாவில்நீா்!
    ஆசை பெருகும் அகத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  4. கவியே எனது வலைக்கு வருகை தந்தமைக்கும் ,கருத்துகளை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி ..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Enjoy this page? Like us on Facebook!)