சாத பக்கோடா (white rice pakoda )
திடீர்னு வீட்டுக்கு விருந்தினர் வந்துட்டாங்களா ? சாதம் மட்டும் தான் வீட்டில் இருக்கா?அட கவலைய விடுங்க ..... இப்போ மீந்து போன சாதம் கூட ,எளிதான சுவையான ஸ்நாக்ஸ் ஆ மாற்றலாம் ... ஆமாங்க சாத பகோடா விருந்தினர்களையும் கவர்ந்து விடும்.... இத எப்படி செய்வதுன்னு வாங்க பார்க்கலாம் .....

தேவையான பொருட்கள் :
சாதம் - 1 கப்
வெங்காயம் - 1 ( பொடியாக நறுக்கியது )
இஞ்சி - 1 துண்டு (பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் - 1 சிறியது (பொடியாக நறுக்கியது )
மிளகாய் தூள் - காரத்துக்கு ஏற்ப
கடலை மாவு - 2 ஸ்பூன்
பஜ்ஜி மாவு- 2ஸ்பூன்
கலர் பவுடர் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு (நறுக்கியது )
கருவேப்பிள்ளை -சிறிதளவு (நறுக்கியது )
செய்முறை
சாதத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு மசித்துக் கொள்ளவும் ...
அதனுடன் ,வெங்காயம் ,இஞ்சி ,பச்சை மிளகாய் ,கடலை மாவு, பஜ்ஜி மாவு , கலர் பவுடர் , மிளகாய்த்தூள் ,உப்பு, கொத்தமல்லி ,கருவேப்பிள்ளை எல்லாம் சேர்க்கவும் ...
சேர்த்தவைகளை நன்றாக பிசையவும் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கவும் (நிறைய தண்ணீர் சேர்க்க கூடாது )
பிசைந்தவற்றை எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும் ...
இப்போது சுவையான ,எளிதான பகோடா தயார் ....
sending this to :
http://sweettoothraf.blogspot.ae/2013/12/cooking-with-seeds-cws-december-2013.html
http://priyaeasyntastyrecipes.blogspot.co.uk/p/cws-host-lineup.html
http://sweettoothraf.blogspot.ae/2013/12/cooking-with-seeds-cws-december-2013.html
http://priyaeasyntastyrecipes.blogspot.co.uk/p/cws-host-lineup.html
delicious.. thanks for linking this recipe with my event..
பதிலளிநீக்குthank u so much such a great event....
பதிலளிநீக்குthank u for linking it to the event... the pakodas looks yum... :)
பதிலளிநீக்கு