கோவக்காய் மிகவும் நல்ல சத்துக்களை கொண்டது .இந்த ப்ரை செய்த அடுத்த சில நேரத்திலேயே தீர்ந்து விட்டது .. நல்லா இருந்தது ...
தேவையான பொருட்கள் :
கோவக்காய் - 10
கடலைமாவு - 3 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
வினிகர் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
செய்முறை :
- கோவைக்காயை நீள , மெல்லிய துண்டுகளாக வெட்டவும் .
- இதனுடன், கடலைமாவு , கரம் மசாலாத்தூள் , உப்பு, மிளகாய்த்தூள் , வினிகர் சேர்த்து , கெட்டியாக பிசையவும் . (நீர்க்க இருந்தால் மொறுமொறுப்பாக இருக்காது )
- அப்படியே பத்து நிமிடங்கள் வைக்கவும் .கோவைக்காயின் நீர் போதுமானது .மேலும் சேர்க்க தேவையில்லை .தேவைப்பட்டால் தெளித்துக்கொள்ளவும் .
- கோவைக்காயை மாவுக்கலவை நன்கு ஒட்டி இருக்குமாறு பார்த்துக்கொளவும் .
- எண்ணையை சூடு செய்து , அதில் இந்த கோவைக்கையை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் .
- அவ்வளவுதான் சுவையான கோவைக்காய் ப்ரை தயார் ..
- http://mykitchenodyssey.blogspot.fr/
- http://zestysouthindiankitchen.com/favorite-recipes-event
சிம்பிள் & டேஸ்டியான குறிப்பாக இருக்கு சங்கீதா.பகிர்விற்கு நன்றி.
பதிலளிநீக்குகோவக்காய் (இங்கு) கிடைப்பது தான் அரிதாகி விட்டது...
பதிலளிநீக்குசெய்முறை குறிப்பிற்கு நன்றி...
அன்பான கருத்துக்கு மிக்க நன்றி ப்ரியசகி ...
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் சகோ ஆம் சில இடங்களில் கிடைப்பது அரிது தான் ...கருத்துக்கு மிக்க நன்றி ...
எளிமையான குறிப்பு..நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குமிக்க நன்றி shamee ..
பதிலளிநீக்குArumaiyana malai unavu .Favourite event-il ianithamaiku nandri..
பதிலளிநீக்கு