lunch லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
lunch லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 அக்டோபர், 2024

garlic-ghee rice |பூண்டு நெய் சாதம்

ரொம்ப  ரொம்ப ஈஸியா குழந்தைங்க லஞ்ச்  பாக்ஸ்க்கு  செய்ய ஒரு சாதம் தான் இந்த பூண்டு நெய்  சாதம் இதுக்கு ஸைட் டிஷ்  ஆக பன்னர்,tofu கிரேவி ,சிக்கன் கிரேவி லாம் சேர்த்து சாப்பிட்டா வேற லெவல் டேஸ்ட் 


 தேவையான பொருட்கள் :

நெய் - 2 ஸ்பூன் 
எண்ணைய்  - 2 ஸ்பூன் 
பூண்டு -2 கட்டி 
ஏலக்காய் - 5 
பச்சை மிளகாய் -3 
புதினா -சிறிது 
சீராக சம்பா அரிசி - 2 கப் 
தண்ணீர் - 3 கப் (1 கப் அரிசி- 1 1/2 கப் ) 1/4 கப் எக்ஸ்ட்ரா சேர்க்கவும் 
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை ஜூஸ் - 1/2 மூடி  

செய்முறை:

  • முதலில் அடிக்கானமான கடாய் எடுத்து , அதில் நெய் - 2 ஸ்பூன் 

எண்ணைய்  - 2 ஸ்பூன் ஊற்றவும் 
  • பின் பூண்டு -2 கட்டி உரித்து நன்கு  தட்டி எடுத்துக்கொள்ளவும் அதை கடாயில் சேர்த்து , சிவக்கும் வரை வதக்கவும் .  
  • பின் ஏலக்காய் - 5 சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் -3 
    புதினா -சிறிது சேர்த்து வதக்கவும் . 
  • இதில்  சீராக சம்பா அரிசி - 2 கப் சேர்த்து வர்க்கவும், நிறம் மாறும் வரை வதக்கவும் . 
  • இதனுடன் 3 கப் தண்ணீர்,உப்பு   சேர்த்து, மூடி போட்டு  கொதிக்க விடவும் 
  • தண்ணீர் சுண்டியதும் எலுமிச்சை ஜூஸ் - 1/2 மூடி சேர்த்து ,கிளறி தம் போட்டு ,10 நிமிடங்கள் வைத்து ,அடுப்பை அனைத்து பின் 10 நிமிடங்கள் அப்படியே விடவும் . 
  • சூடாக பரிமாறவும். சுவையான பூண்டு நெய் சாதம் தயார்   


வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

non veg feast menu

  அசைவ விருந்துக்கான மெனு இது ..இந்த ரெசிபி எல்லாமே ஏற்கனவே எனது வலைப்பக்கத்தில் சேர்த்துள்ளதால் ஒவ்வொரு ரெசிபிக்கான லிங்க் கீழே  இணைத்துள்ளேன் ...

 i

அசைவ மெனு :

நண்டு கிரேவி

இறால் கிரேவி

மீன் குழம்பு

மட்டன் குழம்பு

முட்டை மசாலா

மீன் வறுவல் 

இறால் 65

falooda



வியாழன், 5 மே, 2016

சிக்கன் பிரியாணி 2/chicken briyani 2

எப்போதும் ஒரே மாதிரி பிரியாணி செய்யாமல் நான் சில மாற்றங்கள் செய்து அவ்வப்போது சமைப்பது வழக்கம் ... அதுபோல முயற்சித்தது இந்த பிரியாணி ...சொல்லப்போனால் இதை செய்த பிறகு அதிக முறை செய்து விட்டேன் ...என் கணவரின் favourite ஆகி விட்டது ..
இந்த பிரியாணிக்கு மணம் சிறப்பாக இருக்கும் .அதற்க்கு காரணம் இதில் அரைத்து சேர்க்கும் முறை தான்  ..

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
சிக்கன் - 1மற்றும் 1/4 கப்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
தயிர் - 2 ஸ்பூன்
பிரிஞ்சி இலை -1
பட்டை -1 சிறிது
கிராம்பு - 1
நெய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
மல்லி ,புதினா - சிறிது

அரைக்க :
சின்ன வெங்காயம் - 5

பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் (உங்கள் காரத்துக்கு ஏற்ப )
தக்காளி - 1
பட்டை - 1
ஏலக்காய் - 1
கிராம்பு -2
மிளகு - 1ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு -1 ஸ்பூன்
புதினா ,மல்லி - சிறிது

செய்முறை :

  • முதலில் தக்காளி வெங்காயம் நறுக்கி வைக்கவும் .
  • பாஸ்மதியை சிறிது ஊற வைக்கவும் .
  • அரைக்கவேண்டியவற்றை அரைத்துக்கொளவும் .
  • பின் குக்கரில் எண்ணெய் ,நெய் விட்டு ,பட்டை ,பிரிஞ்சி இலை ,கிராம்பு ,சேர்த்து ,பின் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,தக்காளி சேர்த்து வதக்கவும்
  • .அதனுடன் சிக்கன் துண்டுகள் ,அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும் ..
  • பின் உப்பு சேர்த்து ,2 கப் தண்ணீர் சேர்த்து ,கொதிக்க விடவும் .
  • உப்பு ,காரம் சரிபார்த்து ,அரிசி சேர்த்து ,1 கொதி விட்டு ,மல்லி ,புதினா தூவி மூடி சிம்மில் 10 நிமிடங்கள் வைக்கவும் .
  • 10 நிமிடங்கள் கழித்து ,அடுப்பை அணைக்கவும் .
  • முக்கிய குறிப்பு : 
  • அடுப்பை அணைத்த பின் உடனே திறக்க கூடாது .1-2 மணி நேரம் அப்படியே விடுவது சிறந்தது .
  • குக்கரை திறக்கும் போது அதன் மணம் கமகமக்கும் ...
  • சுவையான சிக்கன் பிரியாணி தயார் 
  • இதே முறையில் ,அரிசியை பாதி வேகவிட்டு வடித்து , வதக்கிய பொருட்கள் ,மசாலா சேர்த்து ,மூடி தம் போட்டும் செய்யலாம் ..
  • இந்த முறையும் சுவையாக இருக்கும் ..
  • இதனுடன் தாள்ச்சா , வெங்காய ரெய்தா ,வேகவைத்த முட்டை இவற்றோடு பரிமாறினால்,இன்னும் சுவை கூடும் ..





திங்கள், 22 ஜூன், 2015

மாங்காய் பச்சடி/mango pachadi

மாங்காய் பச்சடி குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமானது .ஒரு முறை சுவைத்தால் கண்டிப்பாக மனதில் நிற்கும் இதன் சுவை ...

சனி, 25 அக்டோபர், 2014

சிக்கன் பிரியாணி /chicken biryani


ரொம்ப நாளா போடணும்னு நினைத்த ரெசிபி  இது .நேரமின்மையால போட முடியல . இந்தியாவின் மிக பெரிய  உணவின் அடையாளமாய் திகழும் பிரியாணி ரெசிபி இதோ 

வியாழன், 9 அக்டோபர், 2014

நண்டு கிரேவி /crab gravy /nandu gravy


மிகவும் சுவையான நண்டு கிரேவி செய்யும் போது ,இதை சுத்தம் செய்த உடனே ,தேங்காய் பாலில் போட்டால் இதன் சத்துக்கள் வீணாகாது .

திங்கள், 29 செப்டம்பர், 2014

நெல்லிக்காய் ஊறுகாய் /gooseberry pickle/amla pickle/ nellikai oorugai

மிகவும் சுவையான , நாவூற வைக்கும் ஊறுகாய் இது.. இந்த ஊறுகாய் எங்கள் மதிய உணவை மேலும் ருசியாக்கியத்தில் சந்தேகமே இல்லை .


செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

கீரைத்தண்டு பொரியல் /amarnath leaves curry /thandukeerai poriyal

இன்று தண்டு கீரை வாங்கியதில் ,நிறைய இருந்ததால், கொஞ்சம் தனியாக எடுத்து வைத்து பொரியல் செய்தேன் . மிகவும் சுலபமான பொரியல் இது ... 

செவ்வாய், 17 ஜூன், 2014

முட்டைகோஸ் பொரியல் (Cabbage poriyal )

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு என் வலைப்பக்கம் எட்டி பார்க்கிறேன் .. . இன்னைக்காவது ஒரு post போடலாம்னு வந்து இருக்கேன் ..இடைவெளிக்கு மன்னிக்கவும் .இந்த முட்டைகோஸ் பொரியல் 
மிக சுலபமானது ...செய்முறை விளக்கம் இதோ ...

சனி, 10 மே, 2014

வாழைப்பூ கூட்டு (vazhaipoo kootu)

வாழைப்பூ கூட்டு மிக சுலபமான ,ருசியான ,மணமான ,ஆரோக்யமான உணவு . செய்முறை இதோ ...


வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

கோவக்காய் ப்ரை (ivy gourd fry )

கோவக்காய் மிகவும் நல்ல சத்துக்களை கொண்டது .இந்த ப்ரை செய்த அடுத்த சில நேரத்திலேயே தீர்ந்து விட்டது .. நல்லா இருந்தது ...

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

முட்டை பொரியல்

முட்டை என்றாலே எங்கள் வீட்டில் எல்லோருக்கும் விருப்பம் .முட்டை மசாலா போல இதுவும் நன்றாக இருக்கும் .நீங்களும் முயற்சித்து பாருங்கள் ..

வியாழன், 23 ஜனவரி, 2014

சோயா பொரியல் (soya curry)



மிகவும் சத்தான சுவையான ,சோயா பொரியல் செய்வதும் மிக சுலபம் தான் ..இதன் சுவை உங்களை கவர்ந்து விடும் ..சோயா கிரேவி போல இதுவும் எங்கள் வீட்டில் பிடித்த உணவு ....

புதன், 22 ஜனவரி, 2014

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல் (sweet potato curry)

மிகவும் எளிமையானது  சுவையானது  , இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு பொரியல் .சத்தானதும் கூட ...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...