செவ்வாய், 21 ஜனவரி, 2014

பலாக்காய் பொரியல் (raw jackfruit curry )




ரொம்பவே ருசியான , பொரியல் இது .. எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க ...இங்கே பொடியாகவே கிடைக்கும் என்பதால் இந்த முறையில் செய்து இருக்கேன்  .. அப்படி கிடைக்காதவர்கள் , பலாக்காய் தோல் நீக்கி(தோல் நீக்கும் போது பால் வரும் அதனால் கத்தியில்  கொஞ்சம் எண்ணெய் தடவிக்கொள்ளவும்  ,பிறகு ஈர துணியினால் வெட்டிய பகுதியை துடைத்து ,வெட்டி எடுக்கலாம் .)அதை சிறிய துண்டுகளாக்கி , குக்கரில் 2 விசில் விட்டு எடுத்து , blenderல் வைத்து பொடியாக ஆக்கலாம் .(அ ) மிக்சியில் கூட கவனமாக சில சுற்றுகள் விட்டு எடுக்கலாம் .பிறகு கீழ்வரும் முறைப்படி(தண்ணீர் மட்டும் குறைத்து ) செய்து கொள்ளலாம் .இங்கே எனக்கு பொடியாகவே கிடைத்ததால் நான் வாணலில்  செய்து உள்ளேன்  ..

தேவையான பொருட்கள் :
பலாக்காய்- 1 கப் (பொடியாக்கியது )
பாசிபருப்பு - கால் கப்
மிளகாய்த்தூள்- முக்கால் ஸ்பூன்)
மஞ்சள்தூள்- 1/4 ஸ்பூன்  
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 

தாளிக்க :
கடுகு - 1/2 ஸ்பூன் 
உளுந்தம்பருப்பு -கால் ஸ்பூன் 
சின்ன வெங்காயம்- 4(பொடியாக நறுக்கவும் )
எண்ணெய் -தேவைக்கு 

  • முதலில் பாசிபருப்பை சுத்தம் செய்து ,அதை சிறிது தண்ணீரில் 5 நிமிடங்கள் ,ஊற விடவும் 
  •  பிறகு வாணலில் எண்ணெய் விட்டு , தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும் . 
  • அதனுடன் பலாக்காய் துகள்களை சேர்த்து கிளறவும் . இதனுடன் மிளகாய் தூள் ,மல்லித்தூள் ,மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி , 5 நிமிடங்கள் வேக விடவும் .
  • பிறகு பாசி பருப்பு சேர்த்து கிளறி , தண்ணீர் சுண்டி வேகும்வரை விட்டு எடுக்கவும் .
  • அவ்வளவுதான் சுவையான பலாக்காய் பொரியல் தயார் .

  


3 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...