புதன், 22 ஜனவரி, 2014

முட்டை மசாலா (egg masala)

முட்டை எங்கள் எல்லோருமே வீட்டில் எல்லோருக்கும் பிடித்த உணவு... முட்டை மசாலா மிகவும் சுவையானது ....

தேவையான பொருட்கள் :

முட்டை - 4
வெங்காயம் - 4 
தக்காளி - 3 
பச்சை மிளகாய் -1
கருவேப்பில்லை - 1 கொத்து 
சீரகம் - 1/2 ஸ்பூன் 
பட்டை - 1 துண்டு 
கிராம்பு - 1 
பிரிஞ்சி இலை - 1
அன்னாசி மொக்கு -1 
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் 
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன் 
கரம் மசாலா தூள் - கால் ஸ்பூன் 
மஞ்சள் தூள் -கால் ஸ்பூன் 
உப்பு - தேவைக்கு 
சோயாசாஸ் - 1 ஸ்பூன் 
தக்காளி சாஸ் - 1 ஸ்பூன் 

செய்முறை :

  • முதலில் முட்டையை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் .வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும் .
  • கடாயில் ,எண்ணெய் விட்டு பட்டை ,கிராம்பு ,அன்னாசிமொக்கு,பிரிஞ்சி இலை சேர்த்து ,அதனுடன் சீரகம் சேர்த்து தாளிக்கவும் 
  • பிறகு வெங்காயம் ,பச்சை மிளகாய் ,கருவேப்பில்லை சேர்க்கவும் .வெங்காயம் வதங்கியதும் ,தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • இதனுடன் மிளகாய் ,மல்லி ,மஞ்சள்,கரம்மசாலா  தூள்களை சேர்த்து ,வதக்கவும் .
  • தக்காளி நன்கு குழைந்து வரும் வரை வதக்கி , 1/2 கப் தண்ணீர் சேர்த்து ,மூடி 8 - 10 நிமிடங்கள் வேகவிடவும் .பிறகு இதனுடன் சாஸ் வகைகளை சேர்க்கவும் .
  • இப்போது மசாலாவில் முட்டைகளை துண்டுகளாக்கி போடவும் .
  • முட்டை உடையாமல் கவனமாக கிளறி இறக்கவும் .
  • இதோ  சுவையான முட்டை மசாலா தயார் ..சப்பாத்தி ,ரொட்டி ,சாத வகைகளுக்கும் நன்றாக இருக்கும் .  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...