masala லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
masala லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

non veg feast menu

  அசைவ விருந்துக்கான மெனு இது ..இந்த ரெசிபி எல்லாமே ஏற்கனவே எனது வலைப்பக்கத்தில் சேர்த்துள்ளதால் ஒவ்வொரு ரெசிபிக்கான லிங்க் கீழே  இணைத்துள்ளேன் ...

 i

அசைவ மெனு :

நண்டு கிரேவி

இறால் கிரேவி

மீன் குழம்பு

மட்டன் குழம்பு

முட்டை மசாலா

மீன் வறுவல் 

இறால் 65

falooda



செவ்வாய், 20 செப்டம்பர், 2016

பேபி கார்ன் மஞ்சூரியன் /Baby corn manchurian


முதன் முதலாக பேபி காரன் வாங்கி முயற்சித்தேன் ..மிகவும் அருமையாக இருந்தது ..செய்த விரைவில் தீர்ந்தது ஆச்சர்யமே ! முக்கியமாக என் குழந்தைகள் ரசித்து சாப்பிட்டனர் ...

வியாழன், 5 மே, 2016

சிக்கன் பிரியாணி 2/chicken briyani 2

எப்போதும் ஒரே மாதிரி பிரியாணி செய்யாமல் நான் சில மாற்றங்கள் செய்து அவ்வப்போது சமைப்பது வழக்கம் ... அதுபோல முயற்சித்தது இந்த பிரியாணி ...சொல்லப்போனால் இதை செய்த பிறகு அதிக முறை செய்து விட்டேன் ...என் கணவரின் favourite ஆகி விட்டது ..
இந்த பிரியாணிக்கு மணம் சிறப்பாக இருக்கும் .அதற்க்கு காரணம் இதில் அரைத்து சேர்க்கும் முறை தான்  ..

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
சிக்கன் - 1மற்றும் 1/4 கப்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
தயிர் - 2 ஸ்பூன்
பிரிஞ்சி இலை -1
பட்டை -1 சிறிது
கிராம்பு - 1
நெய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
மல்லி ,புதினா - சிறிது

அரைக்க :
சின்ன வெங்காயம் - 5

பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் (உங்கள் காரத்துக்கு ஏற்ப )
தக்காளி - 1
பட்டை - 1
ஏலக்காய் - 1
கிராம்பு -2
மிளகு - 1ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு -1 ஸ்பூன்
புதினா ,மல்லி - சிறிது

செய்முறை :

  • முதலில் தக்காளி வெங்காயம் நறுக்கி வைக்கவும் .
  • பாஸ்மதியை சிறிது ஊற வைக்கவும் .
  • அரைக்கவேண்டியவற்றை அரைத்துக்கொளவும் .
  • பின் குக்கரில் எண்ணெய் ,நெய் விட்டு ,பட்டை ,பிரிஞ்சி இலை ,கிராம்பு ,சேர்த்து ,பின் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,தக்காளி சேர்த்து வதக்கவும்
  • .அதனுடன் சிக்கன் துண்டுகள் ,அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும் ..
  • பின் உப்பு சேர்த்து ,2 கப் தண்ணீர் சேர்த்து ,கொதிக்க விடவும் .
  • உப்பு ,காரம் சரிபார்த்து ,அரிசி சேர்த்து ,1 கொதி விட்டு ,மல்லி ,புதினா தூவி மூடி சிம்மில் 10 நிமிடங்கள் வைக்கவும் .
  • 10 நிமிடங்கள் கழித்து ,அடுப்பை அணைக்கவும் .
  • முக்கிய குறிப்பு : 
  • அடுப்பை அணைத்த பின் உடனே திறக்க கூடாது .1-2 மணி நேரம் அப்படியே விடுவது சிறந்தது .
  • குக்கரை திறக்கும் போது அதன் மணம் கமகமக்கும் ...
  • சுவையான சிக்கன் பிரியாணி தயார் 
  • இதே முறையில் ,அரிசியை பாதி வேகவிட்டு வடித்து , வதக்கிய பொருட்கள் ,மசாலா சேர்த்து ,மூடி தம் போட்டும் செய்யலாம் ..
  • இந்த முறையும் சுவையாக இருக்கும் ..
  • இதனுடன் தாள்ச்சா , வெங்காய ரெய்தா ,வேகவைத்த முட்டை இவற்றோடு பரிமாறினால்,இன்னும் சுவை கூடும் ..





திங்கள், 30 நவம்பர், 2015

Kaadai gravy/காடை கிரேவி

காடை சிக்கனை விட எளிதில் வேகும் .ஆனால் சுவை அபாரமாக இருக்கும் 
தேவையான பொருட்கள்:
காடை -2
பெரிய வெங்காயம் -1
தக்காளி -1
மிளகாய்த்தூள்-1 ஸ்பூன்
மிளகுத்தூள்-1ஸ்பூன் 
மல்லித்தூள்-1ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/2ஸ்பூன்
கரம் மசாலா -1/2 ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
கருவேப்பிலை - 1 கொத்து 
அரைக்க 1:
சின்ன வெங்காயம் -10 
பச்சை மிளகாய் -1
மல்லி தழை-சிறிது 
அரைக்க2:
தேங்காய் -3துண்டுகள்
சோம்பு-1/2ஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய்-தாளிக்க
பட்டை ,கிராம்பு,பிரிஞ்சி இலை-தலா1
இஞ்சி பூண்டு விழுது -1ஸ்பூன் 

செய்முறை:
  • அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து தனியே எடுத்து வைக்கவும் .
  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு , தாளிக்க கொடுத்த வற்றை சேர்த்து தாளிக்கவும் .
  • பின் இதனுடன் வெங்காயம் ,சேர்த்து பொன்னிறமானதும் ,தக்காளி,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் .
  • பின் இதனுடன் தூள் வகைகள்,காடை துண்டுகள் ,உப்பு சேர்த்து வதக்கவும் .
  • தேவையான அளவு நீர் விட்டு,மூடி  வேக விடவும் .
  • குக்கர் என்றால் ஒரு விசில் போதுமானது . பாத்திரம் என்றால் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை சரி பார்க்கவும் .
  • வெந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும் .
  • சூடான சாதம் ,சப்பாத்திக்கு மிகவும் சுவையானது .




புதன், 28 அக்டோபர், 2015

பன்னீர் பட்டர் மசாலா/Paneer butter masala

மிக சுலபமான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தியுடன் நாண் உடன் நல்ல சைட் டிஷ் .கண்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கும்.

சனி, 25 அக்டோபர், 2014

சிக்கன் பிரியாணி /chicken biryani


ரொம்ப நாளா போடணும்னு நினைத்த ரெசிபி  இது .நேரமின்மையால போட முடியல . இந்தியாவின் மிக பெரிய  உணவின் அடையாளமாய் திகழும் பிரியாணி ரெசிபி இதோ 

வியாழன், 9 அக்டோபர், 2014

நண்டு கிரேவி /crab gravy /nandu gravy


மிகவும் சுவையான நண்டு கிரேவி செய்யும் போது ,இதை சுத்தம் செய்த உடனே ,தேங்காய் பாலில் போட்டால் இதன் சத்துக்கள் வீணாகாது .

சனி, 2 ஆகஸ்ட், 2014

இறால் மிளகு வறுவல் (prawn pepper fry )

இறால் மிளகு வறுவல் ஒரு தடவை செய்து பாருங்க .மீண்டும் மீண்டும் செய்துகிட்டே இருப்பீங்க .....


வியாழன், 1 மே, 2014

வாழைப்பூ வடை( Vazhaipoo vadai )

வாழைப்பூ வடை மிக சுலபமான ,ருசியான ,ஆரோக்யமான உணவு. வாழைப்பூ வடை செய்து பார்த்து சொல்லுங்க ...


தேவையான பொருட்கள் :

வாழைப்பூ -3/4கப் (உதிர்த்து நறுக்கியது )
கடலை பருப்பு -1கப் (ஊறியது )
இஞ்சி -1சிறிய துண்டு
பூண்டு-4பல்
காய்ந்த மிளகாய் -3(உங்கள் காரத்துக்கு ஏற்ப )
சோம்பு -1ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
கருவேப்பில்லை -1 கொத்து (பொடியாக நறுக்கிக்கொள்ளவும் )
சின்ன வெங்காயம் -6(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)

செய்முறை :

  • முதலில் வாழைப்பூவை தனியாக நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும் .
  • பிறகு கடலை பருப்பை 2  ஸ்பூன் தனியாக வைத்து விட்டு ,மீதி கடலை பருப்பு ,சோம்பு , பூண்டு ,இஞ்சி ,உப்பு ,மிளகாய் இவற்றை சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்  .
  • இதனுடன் தனியாக வைத்த கடலை பருப்பு , அரைத்த வாழைப்ப்பூ ,நறுக்கிய வெங்காயம் ,நறுக்கிய கருவேப்பில்லை  இவற்றை சேர்த்து ,நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • உப்பு ,காரம் சரிபார்த்து ,பின் அதை சிறு உருண்டைகளாக செய்து , வடை தட்டி ,சூடான எண்ணையில் பொறித்து எடுக்கவும் .
  • அவ்வளவுதான் சுவையான ,மணமான வாழைப்பூ வடை தயார் .
  • sending this to :
  • http://zestysouthindiankitchen.com/favorite-recipes-event
  • http://mykitchenodyssey.blogspot.fr/
  • http://gayathriscookspot.blogspot.in/#

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

பனீர் பட்டாணி மசாலா (mutter paneer masala)

பனீர் பட்டாணி மசாலா நால்லா வந்து இருந்தது . நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன் ...


தேவையான பொருட்கள் :

பனீர் - 1 கப் (வெட்டியது )
பட்டாணி - 1/2 கப் 
பால் - 3 ஸ்பூன் 
பெரிய வெங்காயம் - 1(பொடியாக நறுக்கவும் )
பச்சை மிளகாய் - 1 
சீரகம் - 1 ஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1/4ஸ்பூன் 
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன் 
கரம் மசாலாத்தூள் - 1/2 ஸ்பூன் 
மல்லித்தழை - சிறிது 
உப்பு - தேவைக்கு 

அரைக்க :

பெரிய வெங்காயம் - 1(நறுக்கியது )
தக்காளி - 3 
பட்டை - 1 சிறிய துண்டு 
கிராம்பு - 1
எண்ணெய் - 1 ஸ்பூன் 

செய்முறை :

  • வாணலில் எண்ணெய் விட்டு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வதக்கி அரைத்துக்கொள்ளவும் .
  • பட்டாணியை வேகவைத்து எடுத்த்க்கொள்ளவும் .
  • பனீர் துண்டுகளை தோசைக்கல்லில் ,எண்ணெய் சிறிது விட்டு டோஸ்ட் செய்து கொள்ளவும் .
  • பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு , சீரகம் போட்டு வெடித்ததும் ,வெங்காயம் , பச்சைமிளகாய் ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் .
  • அதனுடன் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும் .அதனுடன் மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் ,மஞ்சள்த்தூள் ,உப்பு சேர்த்து 3-5 நிமிடங்கள் வதக்கவும் .
  • பின் அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து ,5 நிமிடங்கள் கொதிக்கவிடவும் .
  • பிறகு அதில் பால் சேர்த்து கொதிக்கவிடவும் . அதில் பட்டாணி ,பனீர் சேர்த்து கிளறி மல்லித்தழை தூவி இறக்கவும் .
  • அவ்வளவுதான் சுவையான பனீர் பட்டாணி மசாலா தயார் .இது சப்பாத்தி ,ரொட்டிக்கு சுவையாக இருக்கும் .

 

புதன், 19 மார்ச், 2014

மட்டன் குழம்பு (mutton kuzhambu)

மண் சட்டியில் வைக்கும் மட்டன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும் . எங்கள் வீட்டில் மண்சட்டியில் தான் மட்டன் குழம்பு செய்வோம் ..இதே போல மட்டன் கிரேவியும் சுவையானது அதை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் .எப்படி செய்வதுன்னு பார்க்கலாம் வாங்க..

திங்கள், 10 பிப்ரவரி, 2014

முட்டை குருமா (egg kurma )

முட்டை இருந்தால் நிறைய விதங்களில் சமைக்கலாம் . எனது விருப்பபட்டியலில் இதுவும் ஒன்று .. சுலபமானதும் கூட..

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

முட்டை பொரியல்

முட்டை என்றாலே எங்கள் வீட்டில் எல்லோருக்கும் விருப்பம் .முட்டை மசாலா போல இதுவும் நன்றாக இருக்கும் .நீங்களும் முயற்சித்து பாருங்கள் ..

புதன், 22 ஜனவரி, 2014

சன்னா மசாலா (easy channa masala)

மிகவும் சுலபமான முறையில் சன்னா மசாலா செய்யலாம் .. 

முட்டை மசாலா (egg masala)

முட்டை எங்கள் எல்லோருமே வீட்டில் எல்லோருக்கும் பிடித்த உணவு... முட்டை மசாலா மிகவும் சுவையானது ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...