முட்டை என்றாலே எங்கள் வீட்டில் எல்லோருக்கும் விருப்பம் .முட்டை மசாலா போல இதுவும் நன்றாக இருக்கும் .நீங்களும் முயற்சித்து பாருங்கள் ..
இஞ்சி -ஒரு சிறிய துண்டு
சோம்பு-1ஸ்பூன்
மஞ்சள் தூள்-அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் -1(பெரியது )
கடுகு - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்து
உளுந்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
சின்ன வெங்காயம் -8இஞ்சி -ஒரு சிறிய துண்டு
சோம்பு-1ஸ்பூன்
மஞ்சள் தூள்-அரை ஸ்பூன்
பச்சை மிளகாய் -1(பெரியது )
கடுகு - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்து
உளுந்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
செய்முறை :
- முதலில் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் .
- பச்சை மிளகாய் , இஞ்சி , சோம்பு இவற்றை அரைத்துக்கொளவும் .
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து வெடித்ததும் ,உளுந்தம்பருப்பு , கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் .
- பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் .வெங்காயம் நன்கு வதங்கியதும் ,உப்பும்,மஞ்சள்தூளும் சேர்க்கவும் .
- முட்டைகளை அதில் உடைத்து ஊற்றி கிளறவும் .
- பந்து பந்தாக , முட்டை சுருங்கி , வெந்து வரும் . அப்போது இறக்கி விடவும் .
- நிச்சயம் அனைவரையும் பிடிக்கச்செய்துவிடும் இந்த பொரியல் .
- இதை சாதம் ,சப்பாத்திக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும் .குறிப்பாக ரசம் சாதத்துடன் நன்றாகவே இருக்கும் .
எண்ணெய் சிறிது குறைவோ...?
பதிலளிநீக்குஅனைவருக்கும் பிடித்த பொரியல் சூப்பரா இருக்கு...
பதிலளிநீக்குegg poriyal super, love the cute doll...
பதிலளிநீக்குதனபாலன் சகோ ... ஆம் எண்ணெய் சற்று குறைவுதான் . நுணுக்கமாக கவனித்து , பகிர்ந்தமைக்கு மிக மிக நன்றி ..
பதிலளிநீக்குமேனகா ஆம் .. எல்லோருக்கும் பிடித்த பொரியல் .. கருத்துக்கு மிக்க நன்றி ..
பிரியா கருத்துக்களை வந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ... பொம்மையை வர்ணித்தமைக்கு நன்றி ...