இன்னக்கு வீட்டில் இருக்கும், காய்கறிகளை எல்லாம் சேர்த்து இதை செய்தாச்சு ..குழந்தைகளுக்கும் சத்தானது ,அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க ..
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி - 1 கப்
பல்லாரி - 2
காய்கறிகள் - 2 கப் (பொடியாக நறுக்கியது )
இங்கே முட்டைகோஸ் ,கேரட் ,பீன்ஸ் , காளான் , குடைமிளகாய் எல்லாம் சேர்த்துள்ளேன் )
பச்சைமிளகாய் - 2
தக்காளி - 1
பச்சை பட்டாணி - 1/2 கப்
மல்லிதழை - சிறிது
புதினா - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
பூண்டு - 2 (தட்டிகொள்ளவும் )
சோம்பு - 1 ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
பட்டை - 1
அன்னாசிமொக்கு - 1
நெய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
செய்முறை :
- முதலில் இஞ்சி ,பூண்டு ,பச்சை மிளகாய் இவற்றை அரைத்து எடுத்துக்கொளவும் .காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும் .
- குக்கரில் , நெய் ,எண்ணெய் விட்டு சூடானதும் அதில் , பட்டை கிராம்பு , அன்னசிமொக்கு ,சேர்க்கவும் .
- பிறகு அதனுடன் சோம்பு , தட்டிய பூண்டு சேர்த்து வதக்கவும் .
- பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- வெங்காயம் பொன்னிறமானதும் ,அதில் புதினா ,காய்கறிகளை எல்லாம் சேர்த்து வதக்கவும் .
- காய்கறிகளை 8 நிமிடம் வதக்கவும் . இதனுடன் பட்டாணியும் சேர்த்துக்கொள்ளவும்.
- பிறகு அதில் 1 மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து , கொதிக்க விடவும்
- உப்பு , சரிபார்த்து அரிசியும் இட்டு , குக்கரை மூடி ,8நிமிடங்கள் சிம்மில் வைத்து , நிறுத்தவும்
- சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து அதில் எலுமிச்சை சாறு,மல்லித்தழை கலந்து ,கவனமாக கிளறவும் .
- அவ்வளவுதான் சுவையான மணமான வெஜிடபிள் சாதம் தயார் .
நாளை இதுபோல் செய்துவிட சொல்லிட வேண்டியது தான்... பதிவை bookmarka செய்து விட்டேன்... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குசிம்பிள் &ஈஸியா இருக்கு குறிப்பு. நன்றி.
பதிலளிநீக்குநல்ல மணமாக இருக்கு,.அருமை.
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் சகோ ..
பதிலளிநீக்குநிச்சயம் முயச்சித்து பாருங்கள் ...மிக்க நன்றி...
பிரியசகி , மிக்க நன்றி மா ..
ஆசியா அக்கா .. ரொம்ப நன்றி ...