திங்கள், 10 பிப்ரவரி, 2014

முட்டை குருமா (egg kurma )

முட்டை இருந்தால் நிறைய விதங்களில் சமைக்கலாம் . எனது விருப்பபட்டியலில் இதுவும் ஒன்று .. சுலபமானதும் கூட..

தேவையான பொருட்கள் :

முட்டை -3 (வேக வைத்தது )
சின்ன வெங்காயம் - 10 
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1 
பூண்டு -2 
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் 
பட்டை - 1 துண்டு 
கிராம்பு - 1 
பிரிஞ்சி இலை -1 
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன் 
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன் 
மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
கருவேப்பிலை - 1 கொத்து 
அரைக்க :
தேங்காய் - 2 துண்டுகள்
முந்திரி - 4 
பொட்டுகடலை - 1 ஸ்பூன் 
சோம்பு - 1/2 ஸ்பூன் 

செய்முறை :

  • முதலில் சின்ன வெங்காயத்தை , குறுக்கே ,இரண்டாக வெட்டிக்கொள்ளவும் .
  • தக்காளி யும் நறுக்கிகொள்ளவும் ,பச்சை மிளகாய் கீறிக்கொள்ளவும் .
  • எண்ணெய் விட்டு , பட்டை ,கிராம்பு , பிரிஞ்சி இலை ,தட்டிய பூண்டு சேர்த்து பிறகு வெங்காயம் சேர்க்கவும் .
  • வெங்காயம் பொன் நிறமாக வதங்கியதும் ,இஞ்சி பூண்டு விழுது ,பச்சை மிளகாய் ,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் .
  • இதனுடன் மிளகாய்த்தூள் ,மிளகுத்தூள் ,மல்லித்தூள் , உப்பு ,கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறவும் .
  • பிறகு இதனுடன் தண்ணீர் சேர்த்து ,மூடி கொதிக்க விடவும்.
  • இறுதியாக தேங்காய் அரைத்த விழுது  சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு ,இறுதியாக முட்டையை கீறி ,குர்மாவில் சேர்த்து 1 நிமிடம் கழித்து இறக்கவும் .
  • சுவையான முட்டை குருமா தயார் . 


3 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...