வியாழன், 5 மே, 2016

சிக்கன் பிரியாணி 2/chicken briyani 2

எப்போதும் ஒரே மாதிரி பிரியாணி செய்யாமல் நான் சில மாற்றங்கள் செய்து அவ்வப்போது சமைப்பது வழக்கம் ... அதுபோல முயற்சித்தது இந்த பிரியாணி ...சொல்லப்போனால் இதை செய்த பிறகு அதிக முறை செய்து விட்டேன் ...என் கணவரின் favourite ஆகி விட்டது ..
இந்த பிரியாணிக்கு மணம் சிறப்பாக இருக்கும் .அதற்க்கு காரணம் இதில் அரைத்து சேர்க்கும் முறை தான்  ..

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
சிக்கன் - 1மற்றும் 1/4 கப்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது -1 ஸ்பூன்
தயிர் - 2 ஸ்பூன்
பிரிஞ்சி இலை -1
பட்டை -1 சிறிது
கிராம்பு - 1
நெய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
மல்லி ,புதினா - சிறிது

அரைக்க :
சின்ன வெங்காயம் - 5

பச்சை மிளகாய் - 1
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் (உங்கள் காரத்துக்கு ஏற்ப )
தக்காளி - 1
பட்டை - 1
ஏலக்காய் - 1
கிராம்பு -2
மிளகு - 1ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு -1 ஸ்பூன்
புதினா ,மல்லி - சிறிது

செய்முறை :

  • முதலில் தக்காளி வெங்காயம் நறுக்கி வைக்கவும் .
  • பாஸ்மதியை சிறிது ஊற வைக்கவும் .
  • அரைக்கவேண்டியவற்றை அரைத்துக்கொளவும் .
  • பின் குக்கரில் எண்ணெய் ,நெய் விட்டு ,பட்டை ,பிரிஞ்சி இலை ,கிராம்பு ,சேர்த்து ,பின் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,தக்காளி சேர்த்து வதக்கவும்
  • .அதனுடன் சிக்கன் துண்டுகள் ,அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும் ..
  • பின் உப்பு சேர்த்து ,2 கப் தண்ணீர் சேர்த்து ,கொதிக்க விடவும் .
  • உப்பு ,காரம் சரிபார்த்து ,அரிசி சேர்த்து ,1 கொதி விட்டு ,மல்லி ,புதினா தூவி மூடி சிம்மில் 10 நிமிடங்கள் வைக்கவும் .
  • 10 நிமிடங்கள் கழித்து ,அடுப்பை அணைக்கவும் .
  • முக்கிய குறிப்பு : 
  • அடுப்பை அணைத்த பின் உடனே திறக்க கூடாது .1-2 மணி நேரம் அப்படியே விடுவது சிறந்தது .
  • குக்கரை திறக்கும் போது அதன் மணம் கமகமக்கும் ...
  • சுவையான சிக்கன் பிரியாணி தயார் 
  • இதே முறையில் ,அரிசியை பாதி வேகவிட்டு வடித்து , வதக்கிய பொருட்கள் ,மசாலா சேர்த்து ,மூடி தம் போட்டும் செய்யலாம் ..
  • இந்த முறையும் சுவையாக இருக்கும் ..
  • இதனுடன் தாள்ச்சா , வெங்காய ரெய்தா ,வேகவைத்த முட்டை இவற்றோடு பரிமாறினால்,இன்னும் சுவை கூடும் ..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...