மிகவும் சுவையான நண்டு கிரேவி செய்யும் போது ,இதை சுத்தம் செய்த உடனே ,தேங்காய் பாலில் போட்டால் இதன் சத்துக்கள் வீணாகாது .
தேவையான பொருட்கள் :
நண்டு - 1 கி
தேங்காய் - 1 மூடி (பெரியது )
இஞ்சி - 1 துண்டு
பூண்டு -20 பல்
பெரிய வெங்காயம் - 2
பச்சைமிளகாய் - 1
தக்காளி - 2
சோம்பு - 2 ஸ்பூன்
மிளகு - 3 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - 2 கொத்து
மல்லித்தழை - சிறிது
செய்முறை :
- சோம்பு பொடித்து வைக்கவும்
- பின் மிளகை வெற்று வாணலில் மணம் வருமாறு வறுத்து பொடி செய்து தனியே வைக்கவும் .
- இஞ்சி ,பூண்டு விழுது தயார் செய்து வைக்கவும் .
- தேங்காய் பால் தயாரித்து வைக்கவும் (வடிக்கட்ட வேண்டாம் )
- பெரிய வெங்காயம் ,தக்காளி இரண்டையும் நறுக்கி வைக்கவும் .
- தேங்காய் பாலில் ,மஞ்சள்தூள் ,மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் ,இவற்றை போடவும் .அதில் சுத்தம் செய்த உடனே நண்டையும் இந்த கலவையில் போட்டு வைக்கவும் .
- பெரிய பாத்திரத்தில் (நண்டு வேக தேவையான பாத்திரம் )எண்ணெய் விட்டு ,அதில் சோம்புத்தூள் ,பெரிய வெங்காயம் ,கருவேப்பிலை , பச்சைமிளகாய் ,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும் . பின் அதனுடன் தக்காளியும் சேர்த்து வதக்கவும்.
- இதனுடன் நண்டு மசாலாவையும் சேர்த்து ,கிளறி உப்பு,கரம்மசாலாத்தூள் சேர்த்துகிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வேகவிடவும்
- கிரேவி பதம் வந்தவுடன் இறக்கி பரிமாறலாம் .
super nandu gravy Sangeetha, delicious...
பதிலளிநீக்குthank you so much priya akka
நீக்கு