புதன், 13 நவம்பர், 2013

கோதுமை வெல்ல கேக் (wheat cake with jaggery)


கேக் எப்போதும் மைதாவில் செய்து இருப்பிங்க . ஒரு மாற்றத்துக்கு கோதுமையில்,அதுவும் வெல்லம் சேர்த்து செய்தால் எப்படி இருக்கும் ?
இதோ செய்முறை . 

தேவையான பொருட்கள் :

கோதுமை - 1 மற்றும் 1/2 கப் 
பேக்கிங் சோடா -1/2  டீ ஸ்பூன் 
பேக்கிங் பவுடர் - 1/2 டீ ஸ்பூன் 
பால் -1 கப் 
வெல்லம் - 1 கப் துருவியது 
எண்ணெய் - 1/2 கப் 
வெண்ணிலா எசென்ஸ் -3 துளிகள் 
டூட்டி பிரூட்டி - 1 ஸ்பூன்
முந்திரி - 1 ஸ்பூன் 

செய்முறை : • இந்த ரெசிபி  cooks joy vardini அவங்க ரெசிபி பார்த்து try செய்தேன் .அவங்க muffin pan ல் செய்து இருந்தாங்க .என்னிடம் அது இல்லாததால் ,நான் கேக்காக ட்ரை செய்தேன் .
 • முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு எடுத்து சலித்துக் கொள்ளவும் 
 • அதனுடன் பேக்கிங் சோடா ,பேக்கிங் பவுடர் சேர்க்கவும் 
 • இவர்ற்றுடன்  துருவிய வெல்லம் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கவும் .
 • இதனுடன் இப்போது பாலை சேர்த்து ,கலக்கவும்  .
 • இப்போது இதனுடன் வெனிலா எசென்ஸ் ,முந்தரி ,டூட்டி ப்ருட்டி சேர்க்கவும் .
 • பிறகு எண்ணையும் சேர்த்து கலக்கவும் .
 • ஒரு பேக்கிங் பாத்திரத்தில் , இவற்றை ஊற்றி ,முற்சூடு செய்யப்பட்ட அவனில் , 350 F ல் வைத்து 30 -40 நிமிடங்கள் வைக்கவும் 
 • ஒரு toothpick விட்டு எடுத்தால் ,அதில் ஒட்டாமல் வரும் .அதுவே பதம் . அப்போது எடுக்கலாம் .இல்லாவிட்டால் மேலும் சில நிமிடங்கள் அவனில் வைக்கலாம் 
 • சுவையான கோதுமை வெல்ல கேக் தயார்.
 • இதில் விருப்பப்பட்டால் ஏலக்காய் தூளும் சேர்க்கலாம் .
 •  .
 • sending this to :

5 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...