திங்கள், 11 நவம்பர், 2013

ரவா தோசை (rava dosa)

திடிர்னு தோசை செய்யலாம் வாங்க .ஊறவைக்க வேண்டாம் .
 அரைக்க வேண்டாம் .
எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி தோசை செய்யலாம்  வாங்க .


தேவையான அளவு :

ரவா -3 /4 கப்
மைதா - 1/4 கப் 
அரிசி மாவு - 1 கப் 
பல்லாரி - 1 (பெரியது )
பச்சை மிளகாய் -1 (சிறியது )
சீரகம் - 1 ஸ்பூன் 
மிளகு -1/2 ஸ்பூன் 
உளுந்தம்பருப்பு -1 ஸ்பூன் 
கடுகு - 1/2 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கருவேப்பிலை - 1 கொத்து 
மல்லிதழை -சிறிது (விருப்பப்பட்டால் )
தயிர் - 1ஸ்பூன் 
எண்ணெய் - தாளிக்க  

செய்முறை :

  • முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா ,ரவா ,அரிசி மாவு ,உப்பு,தயிர்  சேர்த்து கரைத்துக்கொள்ளவும் .முதலில் சிறிது தண்ணீர் விட்டு,கட்டிகள் இல்லாமல்  கரைக்கவும் .பிறகு மேலும்  தண்ணீர்  சேர்த்து ,தோசை மாவை விட சிறிது நீர்க்க கரைத்துக்கொள்ளலாம் .
  • பல்லாரியையும் ,பச்சை மிளகாயும்  பொடியாக நறுக்கிகொள்ளவும் .
  • ஒரு வாணலில் எண்ணெய் விட்டு ,கடுகு ,உளுந்தம்பருப்பு ,சீரகம் ,மிளகு சேர்த்து ,பிறகு அதனுடன் பல்லாரிசேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும் ,பிறகு கருவேப்பிலை,மல்லிதழை  சேர்த்து வதக்கவும் 
  • வதக்கியவற்றை ரவா மாவு கரைசலில் விட்டு கலக்கவும் .
  • இவற்றை 10 நிமிடங்கள் அப்படியே விடவும் .
  • பிறகு தோசைகல்லை சுடவைத்து அதில் ,மாவை பரவலாக ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு ,சற்று பொறுத்து ,பிறகு   திருப்பி போட்டு எடுக்கவும் .
  • சுவையான மணமான ரவா தோசை தயார் .
  • இதனுடன் காரட் துருவியது கலந்தும் செய்யலாம் .
  • உங்கள் சுவைக்கு ஏற்ப முறுகலாக எடுக்கலாம் .

6 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...