மிக சுலபமான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தியுடன் நாண் உடன் நல்ல சைட் டிஷ் .கண்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள் :
பனீர் - 1 கப் (துண்டுகளாக்கியது )
பெரிய வெங்காயம் - 2 (பெரியது )
தக்காளி -2
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
வெண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கசூரி மேத்தி - 1 ஸ்பூன்
மல்லித்தழை - அலங்கரிக்க
தனியாக அரைக்க :
முந்தரி -5
பால் ஆடை - 2 ஸ்பூன்
தாளிக்க :
பட்டை ,கிராம்பு ,பிரிஞ்சி இலை - தலா 1
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
செய்முறை :
- முதலில் சிறிது வெண்ணெய் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் ,தக்காளி இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும் .
- இதனுடன் மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் , உப்பு ,மஞ்சள்தூள் ,கரம் மசாலாத்தூள் சேர்த்து ஆறியதும் அரைக்கவும் .
- பின் வெண்ணெய் விட்டு அதில் தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து ,அதனுடன் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
- நன்கு வதங்கியதும் ,தேவையான தண்ணீர் கலந்து ,கசூரி மேதி சேர்த்து ,கொதித்ததும் , பனீர் துண்டுகள் சேர்த்து கிளறி விடவும்
- உடனே முந்திரி ,பால் ஏடு அரைத்த விழுது சேர்க்கவும் .(இதுவே நல்ல ருசியை கொடுக்கும் ).எனவே மறக்காமல் சேர்க்கவும் .
- என்னிடம் பிரெஷ் க்ரீம் இஇல்லாததால் நான் பாலேடு சேர்த்தேன் .ப்ரெஷ் க்ரீம் இருப்பவர்கள் முந்திரி மட்டும் அரைத்து ,சேர்த்து பின் க்ரீம் சேர்க்கலாம் .
- மல்லிதழை தூவி ,2 நிமிடம் கொதித்ததும் இறக்கி விடலாம் .
- அவ்வளவுதான் சுவையான ,மணமான பனீர் பட்டர் மசாலா தயார்
ரொம்ப நல்லாயிருக்கு சங்கீதா. நான் வேறு முறையில் செய்வேன்.. அடுத்த முறை இதே போல் செய்து பார்க்கிறேன்..
பதிலளிநீக்கு