அம்மாவின்
பொய் அழுகைக்கு
தானும்
சேர்ந்து
அழும்
அழகிய
பேதை .....
அவள்
பட்டுப்பாவாடை
அணிந்த
குட்டி தேவதை ...
அவள்
தன் தம்பிக்கு
இரண்டாம்
தாய் ....
அவள்
அப்பாவை
அதிகம்
சாப்பிடச்சொல்லி
அதட்டும்
அழகான
ராச்சசி...
அவள்
அம்மாவின்
சிறந்த
ஆடை தேர்வாளர் ...
அவள்
முத்தமிட்டு ,
பள்ளி செல்லும்
பேதை ...
அவள்
மின்னல்
கீற்றுகளை ,
கன்னங்களில்
குவித்து
வீசும்
தாரகை...
அவள்
மின்மினிப்பூச்சாய்
கண் சிமிட்டும்
காரிகை ...
மொத்தத்தில்
அவள்
வாழும்
எங்கள் வீடு ,
ஒரு குட்டி
தேவதையின்
கூடு .....
cute kutti
பதிலளிநீக்குmikka nandri akka
பதிலளிநீக்குகவிதை அருமை.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு