குழந்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 நவம்பர், 2014

விடுமுறைக்காக ....

அந்த
அடைமழை 
இரவில் ,
சீரியலுக்கு 
பதிலாக செய்திகள் ......
ஏக்கத்தில் 
குழந்தைகள் 
விடுமுறைக்காக  ..........

திங்கள், 3 நவம்பர், 2014

துள்ளித் திரிந்த பால்யப்பருவம்


இன்ச் இன்ச்சாய் ரசித்த பச்சுமிட்டாய்,
பாப்கார்ன் வந்தும் மறக்கவில்லை ....

திணறும் புன்னகை மறைத்து ,
போட்டோவுக்கு   கொடுத்த அட்டென்ஷன் போஸ் போல
'செல்பி' போட்டோ அழகில்லை ......

மாட்டு வண்டி "பேக் சீட்" போல
சொகுசு பஸ்ஸின் ஏசி பயணம் இனிக்கவில்லை ....

ஒத்த பைசா மிட்டாயின் 'காக்காய் கடி' நட்பைப் போல
பீசா ,பர்கர் 'ட்ரீட்'டில் நெருக்கமில்லை ....

குழாயடியில் 'க்யூ' நின்று குடித்த குடிநீர் போல ,
கூலிங் மினரல் வாட்டர் தாகம் தீர்ப்பதில்லை ....

தென்னை மட்டை தந்த கிரிக்கெட் இன்பம்
இன்று 20- 20 கொடுக்கவில்லை ....

முடிந்தவரை துரத்தி ரசித்த அத்திப்பூ
அம்பாஸிடர்  போல ,
ஆடி காரையும்  ரசிக்கவில்லை ....

ஒரே ஒரு கைப்பிடி
அச்சு வெல்லம்,பொரியரிசி
தத்த ருசி போல
லேஸ் ,குர்குரே ருசிக்கவில்லை ....

இளமையும் ,முதுமையும்
கடந்தே  போனாலும் ,
பால்யப்பருவம் என்றும்
மறப்பதற்கில்லை ...
அந்த இனிமைகள் மீண்டும்
வருவதற்கில்லை ....








சனி, 1 பிப்ரவரி, 2014

அவல் உப்புமா (poha upma)

பொதுவாக எனக்கு சுலபமான சமையலில் விருப்பம் அதிகம் .காலைல அவசரமா ஸ்கூல் , அனுப்பனும்னு அன்னைக்கு எனது தேர்வு அவல் உப்புமாவா தான் இருக்கும் .. இது மிகவும் சத்தானதும் கூட .. இதை ஒரு முறை சுவைத்தால் நிச்சயம் உங்கள் விருப்ப பட்டியலில் அவல் உப்புமா சேர்ந்துவிடும் .. 


புதன், 27 நவம்பர், 2013

எங்கள் வீட்டு குட்டி தேவதை (சோனா )....

அவள்
அம்மாவின்
பொய் அழுகைக்கு
தானும்
சேர்ந்து
அழும்
அழகிய
பேதை .....

அவள்
பட்டுப்பாவாடை
அணிந்த
குட்டி தேவதை ...

அவள்
தன் தம்பிக்கு
இரண்டாம்
தாய் ....

அவள்
அப்பாவை
அதிகம்
சாப்பிடச்சொல்லி
அதட்டும்
அழகான
ராச்சசி...

அவள்
அம்மாவின்
சிறந்த
ஆடை தேர்வாளர் ...

அவள்
முத்தமிட்டு ,
பள்ளி செல்லும்
பேதை ...

அவள்
மின்னல்
கீற்றுகளை ,
கன்னங்களில்
குவித்து
வீசும்
தாரகை...

அவள்
மின்மினிப்பூச்சாய்
கண் சிமிட்டும்
காரிகை ...

மொத்தத்தில்
அவள்
வாழும்
எங்கள் வீடு ,
ஒரு குட்டி
தேவதையின்
கூடு .....

ஞாயிறு, 17 நவம்பர், 2013

எனது மகள் சோனாவின் கைவண்ணம் (my daughter's craft work ) x- mas tree


குழந்தைகளுக்கான எளிய முறை கிறிஸ்துமஸ் மரம் இது ..
எனது மகள் செய்தது ...இதோ உங்களுக்காக ... 

புதன், 13 நவம்பர், 2013

குழந்தைகளை பப்பாளி சாப்பிட வைக்கலாம் எளிமையா ...


எனது மகள் பப்பாளி சாப்பிடவே மாட்டாள் .
அதனால எனது மகளுக்கு பிடித்த மாதிரி கொடுக்க முடிலன்னு வருத்தமா இருந்தது . 
ஆனா  இப்போ ஒரு வழி கிடைச்சு 
இருக்கு ...ரொம்ப build -up பண்ணாம விசயத்துக்கு வரேன் 

நேரு மாமா பாடல் -children's day special -nehru mama

எனது மகள் சோனாவுக்கு அவங்க ஸ்கூல் ல நேரு மாமா பற்றி 
பாடல் சொல்ல சொல்லி இருக்காங்க ..
இணையத்தில் பார்த்தால் எல்லாம் ,அவளுக்கு கஷ்டமாக இருப்பது போல 
இருந்தது . சரி ஓகே இன்னைக்கு ஒரு கவிப்புயலா மாறி 
எல்லாரயும் கலந்கடிசுடலாம்னு  களத்தில் இறங்கிட்டேன் .
இந்த பாடல ரொம்ப சிரமம் இல்லாம,சீக்கிரம் கத்துக்கிட்டா ..
இதோ நீங்களும் என் இம்சையை பொறுத்துக்கிட்டு 
படிச்சு பாருங்க ..


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...