பொதுவாக எனக்கு சுலபமான சமையலில் விருப்பம் அதிகம் .காலைல அவசரமா ஸ்கூல் , அனுப்பனும்னு அன்னைக்கு எனது தேர்வு அவல் உப்புமாவா தான் இருக்கும் .. இது மிகவும் சத்தானதும் கூட .. இதை ஒரு முறை சுவைத்தால் நிச்சயம் உங்கள் விருப்ப பட்டியலில் அவல் உப்புமா சேர்ந்துவிடும் ..
தேவையான பொருட்கள் :
கெட்டி அவல் - 1 கப்
பல்லாரி - 1
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1
கருவேப்பிலை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
செய்முறை :
- முதலில் கெட்டி அவலை மூன்று ,நான்கு முறை நன்கு அலசிக்கொள்ளவும் .(அலசும் போதே பாதி ஊறிவிடும் )
- பிறகு அதை முக்கால் கப் தண்ணீர் ,உப்பு சேர்த்து ஊறவிடவும் .
- அதற்குள் ,வாணலில் எண்ணெய் விட்டு , கடுகு ,காய்ந்த மிளகாய் ,உளுந்தம்பருப்பு ,சீரகம் , கருவேப்பிலை,மஞ்சள்தூள் , சேர்த்து கிளறவும் .
- பிறகு அதனுடன் பல்லாரி,ஒரு சிட்டிகைஉப்பு (ஏற்கனவே ஊறவைத்த அவலில் சேர்த்து இருப்பதால் ) சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும் .
- பின் ஊறிய அவலை எடுத்து ,நன்கு உதிர்த்து விடவும் .(தண்ணீர் இல்லாமல் உதிர் உதிரியாக இருக்க வேண்டும் .)
- அதை வாணலில் கொட்டி கிளறவும் கடைசியாக , எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விடவும் . இது மிகவும் ரம்யமான சுவையை தரும் .
- அவ்வளவுதான் அவல் உப்புமா தயார் .
- விருப்பப்பட்டால் , வறுத்த நிலக்கடலை கூட தாளிக்கும் போது சேர்த்து கொள்ளலாம் .
- குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும் .
நான் அடிக்கடி செய்வதுண்டு. எனக்கு ரொம்ப பிடிக்கும்.
பதிலளிநீக்குDelicious Sangeetha, very nicely made...
பதிலளிநீக்குஇருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
பதிலளிநீக்கு