திங்கள், 3 நவம்பர், 2014

துள்ளித் திரிந்த பால்யப்பருவம்


இன்ச் இன்ச்சாய் ரசித்த பச்சுமிட்டாய்,
பாப்கார்ன் வந்தும் மறக்கவில்லை ....

திணறும் புன்னகை மறைத்து ,
போட்டோவுக்கு   கொடுத்த அட்டென்ஷன் போஸ் போல
'செல்பி' போட்டோ அழகில்லை ......

மாட்டு வண்டி "பேக் சீட்" போல
சொகுசு பஸ்ஸின் ஏசி பயணம் இனிக்கவில்லை ....

ஒத்த பைசா மிட்டாயின் 'காக்காய் கடி' நட்பைப் போல
பீசா ,பர்கர் 'ட்ரீட்'டில் நெருக்கமில்லை ....

குழாயடியில் 'க்யூ' நின்று குடித்த குடிநீர் போல ,
கூலிங் மினரல் வாட்டர் தாகம் தீர்ப்பதில்லை ....

தென்னை மட்டை தந்த கிரிக்கெட் இன்பம்
இன்று 20- 20 கொடுக்கவில்லை ....

முடிந்தவரை துரத்தி ரசித்த அத்திப்பூ
அம்பாஸிடர்  போல ,
ஆடி காரையும்  ரசிக்கவில்லை ....

ஒரே ஒரு கைப்பிடி
அச்சு வெல்லம்,பொரியரிசி
தத்த ருசி போல
லேஸ் ,குர்குரே ருசிக்கவில்லை ....

இளமையும் ,முதுமையும்
கடந்தே  போனாலும் ,
பால்யப்பருவம் என்றும்
மறப்பதற்கில்லை ...
அந்த இனிமைகள் மீண்டும்
வருவதற்கில்லை ....








4 கருத்துகள்:

  1. ஒத்த பைசா மிட்டாயின் 'காக்காய் கடி' நட்பைப் போல
    பீசா ,பர்கர் 'ட்ரீட்'டில் நெருக்கமில்லை ....//

    உண்மை உண்மை...பஞ்சு மிட்டாயை பார்க்கும் போது ஒரு இணைபிரியாத ஏதோ ஒன்று உள்ளுக்குள் தோன்றும் அல்லவா..?

    கவிதை ரசனை வாழ்த்துக்கள்
    நன்றி
    ஒம் சாய் ராம்
    உமையாள் காயத்ரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக ....மறக்க முடியாத மலரும் நினைவுகள் .... உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அக்கா ...

      நீக்கு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...