புதன், 5 நவம்பர், 2014

தக்காளி சூப் /tomato soup

மழை நேரங்களில் சூப் சாப்பிட சூப்பரா இருக்கும் . மேலும் சூப் பசியை தூண்டும் . சூப் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தக்காளி சூப் தான் . அதன் செய்முறை இதோ ..


தேவையான பொருட்கள் :

பழுத்த தக்காளி - 4
பூண்டு - 3-4 பல்(பொடியாக நறுக்கவும் )
பிரிஞ்சி இலை - 1 
வெண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு 
மிளகுத்தூள் - தேவைக்கு 
சர்க்கரை - 1 ஸ்பூன்
கார்ன் மாவு - 1 ஸ்பூன் 
மல்லிதழை- அலங்கரிக்க 

செய்முறை :

  • முதலில் ஒரு சிறிய குக்கரில் வெண்ணெய் சேர்த்து ,சூடானதும் ,பிரிஞ்சி இலை சேர்த்து ,பின் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும் 
  • .இதனுடன் தக்காளி சேர்த்து 1 கப் தண்ணீர் சேர்த்து மூடி 2 விசில் வரை விடவும் 
  • பிறகு குக்கரை திறந்து ,தக்காளியை தனியே எடுத்து ,அதன் தோல் உரித்து ,தக்காளியை அரைக்கவும்.
  • அரைத்தவற்றை ஒரு வடிகட்டி மூலம் வடிகட்டி ,அதை வேகவைத்த தண்ணீர் ,பிரிஞ்சி இலை,சர்க்கரை ,உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் .
  • 3-4 நிமிடங்கள் கொதிக்க விட்டு ,அதனுடன்தண்ணீரில் கரைத்த காரன் மாவு சேர்த்து ,திக்காக வரும்போது நிறுத்தவும் .
  • மிளகுதூள் உங்கள் சுவைக்கு ஏற்ப சேர்க்கவும் .மல்லிதழை தூவி சூடாக பரிமாறவும் .(மல்லிதழை இல்லாததால் நான் போடவில்லை )

3 கருத்துகள்:

  1. நீங்கள் செய்து வைத்திருக்கும் தக்காளி சூப்பை எடுத்து சாப்பிடணும் போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...