வெள்ளி, 24 ஜனவரி, 2014

சமைத்து அசத்தலாமில் எனது சிறப்பு விருந்தினர் பகிர்வு ...

நான் மிகவும் ரசிக்கும் வலைதளங்களில் ஆசியா அக்காவின் சமைத்து அசத்தலாம் , வலைத்தளம் முக்கியமானது ... அவங்க சமையல் எல்லாமே தூள் கிளப்பும் .அதே போல அவங்க பழகும் விதமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அவங்க சிறப்பு விருந்தினர் பகிர்வை பற்றி , தனது வலையில் அறிவித்த போது , மிகவும் சந்தோஷப்பட்டேன். பிறகு எனது குறிப்பை  அனுப்பி வைத்தேன் . அவங்க கிட்ட இருந்து மெயில் வந்த போது அலாதியான சந்தோஷத்தில் இருந்தேன் .. நான் நினைத்து கூட பார்க்கவில்லை இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று . அந்த நாளும் இன்று வந்துவிட்டது .. இன்று காலை அவங்க வலையில் எனது குறிப்பு வந்ததை கனவை போல உணர்ந்தேன் ... முக்கியமா ,நான் வலை ஆரம்பித்த நாளில் இருந்து, இன்னைக்கு தான் என் வலையை நிறைய பேர் வந்து பார்த்து இருக்காங்க. எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை ... இது என் வலை வாழ்வில் குறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள் ... , அவங்க வலை மூலம் எனக்கு பின்தொடரும் நண்பர்களும் கிடைத்துள்ளார்கள் ... அவர்களை இந்த வலைக்கு அன்புடன்  வரவேற்கிறேன் ...  ஆசியா அக்காவிற்கு நான் எப்படி என் நன்றிகளை சொல்வதுன்னே தெரியல .. அக்கா உங்களுக்கு  என் மனமார்ந்த நன்றிகள்  பல ...இதோ சமைத்து அசத்தலாமில் வெளிவந்த எனது சிறப்பு விருந்தினர் பகிர்வு

6 கருத்துகள்:

  1. என் வலைப்பூவில் தங்கள் பகிர்வைப் பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஆசியா அக்கா வாங்க வாங்க ...உங்கள் அன்பான கருத்துக்கு நன்றிகள் கோடி...

    பதிலளிநீக்கு
  3. உங்களின் சாதபகோடா நான் செய்து பார்த்தேன்.மிகவும் நல்ல டேஸ்ட்&க்ரிஸ்பி. வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. பிரியசகி செய்து பார்த்திங்களா ? ரொம்ப சந்தோசம் .எல்லாருக்கும் நிச்சயம் பிடிக்கும் இந்த ரெசிபி .செய்து பார்த்ததுக்கும் , அதை அழகாய் கருத்துக்கள் மூலம் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி ...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...