மிகவும் சத்தான சுவையான ,சோயா பொரியல் செய்வதும் மிக சுலபம் தான் ..இதன் சுவை உங்களை கவர்ந்து விடும் ..சோயா கிரேவி போல இதுவும் எங்கள் வீட்டில் பிடித்த உணவு ....
தேவையான பொருட்கள் :
சோயா - 1 கப்
வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது )
சோம்பு - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை :
- முதலில் சோயாவை உப்பு சேர்த்து , வேகவைத்து எடுத்து ,தண்ணீரை வடித்து , பிழிந்து கொள்ளவும் . அதை 2(அ) 3 துண்டுகளாக வெட்டி தனியே வைக்கவும் .
- ஒரு கடாயில் எண்ணெய் விட்டு , கடுகு சேர்த்து வெடித்ததும் , உளுந்து , சேர்க்கவும் . பிறகுசோம்பு , வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
- இதனுடன் சோயா துண்டுகளை சேர்த்து , மிளகாய்த்தூள் ,மல்லித்தூள் ,கரம் மசாலாத்தூள்களை சேர்க்கவும் .
- உப்பும் சிறிது சேர்க்கவும் (உப்பு ஏற்கனவே வேக வைக்கும் போது சேர்த்து இருப்பதால் , கவனமாக சேர்க்கவும் .)
- சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும் . எல்லாம் நன்றாக கலக்கும் படி நன்கு கிளறி , 2 நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும் .
- அவ்வளவுதான் சுவையான சோயா பொரியல் தயார் ...
வணக்கம்...
பதிலளிநீக்குhttp://asiyaomar.blogspot.in/2014/01/11-guest-post-rice-pakoda.html மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்...
வாழ்த்துக்கள்...
வணக்கம் ...மிக்க நன்றி .. உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும் ...
பதிலளிநீக்குசோயா பொரியல் அருமை.ஆசியாவின் சிறப்பு விருந்தினர் பக்கம் மூலம் தொடர்கிறேன். வாழ்த்துக்கள் சங்கீதா.
பதிலளிநீக்குமிக அருமையனா சோயா பொரியல்
பதிலளிநீக்குமிக்க நன்றி பிரியசகி...உங்களை என் வலைக்கு அன்புடன் வரவேற்கிறேன் ...
பதிலளிநீக்குஜலீலா அக்கா ரொம்ப நன்றி ,...