சனி, 8 நவம்பர், 2014

மணத்தக்காளி கீரை சூப் /manthakkali keerai soup/blacknight shade soup

மணத்தக்காளி கீரையில் கால்சியம் ,பாஸ்பரஸ் ,அயர்ன் ,விட்டமின் ஏ ,பி ,சி ,தாது உப்புகள் நிறைய உள்ளது  .தொண்டை வலி ,தொண்டைப்புண்,வயிற்றுப்புண் ,வாய்ப்புண் இவற்றிற்கு மிக நல்லது .உடல் சூட்டை குறைக்கும் தன்மை கொண்டது .

தேவையான பொருட்கள் :

மணத்தக்காளி கீரை -1 கப் 
முருங்கை கீரை - 1 கப் 
பூண்டு - 3 பல் 
சின்ன வெங்காயம் - 5 
அரிசி கழுவிய தண்ணீர் - 4 கப் 
மிளகு - 1 ஸ்பூன் 
சீரகம் - 1 ஸ்பூன் 
உப்பு - தேவைக்கு .

செய்முறை :

  • முதலில் அரிசி கழுவிய தண்ணீரில் தட்டிய வெங்காயம் ,தட்டிய பூண்டு சேர்த்து வேகவைக்கவும் .
  • கொதிவரும்போது மணத்தக்காளி கீரை ,உப்பு சேர்த்து ,வேகவிடவும் 
  • மணத்தக்காளி கீரை நன்கு வெந்ததும் ,முருங்கை கீரை சேர்க்கவும் .
  • இதனுடன் மிளகு ,சீரக தூள் சேர்த்து கிளறவும் .
  • .2 நிமிடங்கள் கழித்து நிறுத்தவும் (முருங்கை கீரை அதிகம் வேக கூடாது  .முருங்கை கீரை  நிறம் மாறக்கூடாது .இல்லாவிடில் அதன் சத்துக்கள் போய்விடும் ).
  • அவ்வளவுதான் சுவையான ,மணமான மணத்தக்காளி கீரை சூப் தயார் 

4 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...