செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

சோயா கிரேவி


               சோயா கிரேவி



தேவையான பொருட்கள்:

சோயா - வேகவைத்து,பிழிந்து  2 அல்லது 4 துண்டுகளாக நறுக்கியது    - 1 கப் 
வெங்காயம் (பெரியது) -1
தக்காளி - 1
ப.மிளகாய்-1


கருவேப்பிலை சிறிது
கடுகு
பட்டை-1 
அன்னாசி மொக்கு -1
கிராம்பு-1
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
மல்லி தூள் -1ஸ்பூன்
மசாலா தூள்-1 சிட்டிகை
சீரகத்தூள் - 1சிட்டிகை
உப்பு - தேவையான  அளவு
எண்ணை- தேவையான அளவு
கேசரி பவுடர் - சிறிது 
சோயா சாஸ் 
சில்லி சாஸ் 

செய்முறை:

முதலில் குக்கர் ஒன்றை எடுத்து கொள்ளவும்

அதில் எண்ணெய் விட்டு , அதில் கடுகு ,பட்டை,கிராம்பு,அன்னாசி மொக்கு போட்டு தாளிக்கவும் .

அடுத்து அதில் வெங்காயம் ,பச்சை  மிளகாய்,கருவேப்பிலை    போட்டு வதக்கவும்
பின்னர் தக்காளி போட்டு வதக்க்கவும் 

இப்போது வேகவைத்து நறுக்கிய  சோயாவை சேர்த்து வதக்கவும் 

பிறகு தூள் வகைகளை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும் 

தேவைப்பட்டால் மிகவும் சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளவும்
பிறகு கேசரி பவுடர்,உப்பு  போட்டு கிளறவும்


பின்னர் 5 நிமிடம் குக்கரில் சிம்மில் வைத்து பிறகு திறக்கவும்

பின்னர் அதை சிம்மில் வைத்து சோயசாஸ் ,சில்லி சாஸ் கலந்து சிறிது நேரம் வைக்கவும் 

இப்போது சுவையான மற்றும் சத்தான சோயா கிரேவி  தயார் 


இதை சப்பாத்தியுடன் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும் 






5 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...