வெள்ளி, 21 மார்ச், 2014

மிருதுவான இட்லி ( soft idli)

இட்லி  தமிழ் நாட்டின் ஒரு அருமையான அடையாளம்னே சொல்லலாம் .குழந்தைகள்முதல் பெரியவர் வரை எல்லாருக்கும் இட்லி பிடித்த உணவாகவே இருக்கும் ..இதோ அதை எப்படி செய்யலாம் நு பார்க்கலாம்,...


தேவையான பொருட்கள் :
இட்லி அரிசி - 4 டம்ளர் (IR20)
உளுந்து - 1 டம்ளர்
வெந்தயம் - 1/2 ஸ்பூன்  
உப்பு - தேவையான அளவு 

செய்முறை :

  • முதலில் உளுந்து ,அரிசி இவற்றை 3 மணி நேரம் ஊற வைக்கவும் .
  • பிறகு உளுந்தை கழுவி,வெந்தயத்துடன் சேர்த்து  கிரைண்டரில் அரைக்கவும் .
  • நன்கு உளுந்து மைய வேண்டும் .அவ்வப்போது சிறிது தண்ணீர் சேர்க்கலாம் .(எனக்கு கிட்ட தட்ட 40 நிமிடங்கள் ஆகிறது .உங்கள் கிரைண்டரை பொறுத்து நேரம் மாறுபடலாம் .)
  • உளுந்து  மாவு எடுத்தால் பந்து பந்தாக அழகாக வரும் அதுதான் பதம் .இப்போது மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும் .
  • பிறகு கிரைண்டரில் அரிசியை கழுவி போடவும் .அதனுடன் கல் உப்பு சேர்த்து அரக்கவும்.
  • அவ்வப்போது தண்ணீர் விடவும் .அதிகம் தண்ணீர் விடவும் கூடாது .குறைவாகவும் தண்ணீர் விட கூடாது .குளிர்ந்த நீரை கூட விடலாம் .இது கிரைண்டர் ஓடும் போது மாவு சூடாகாமல் இருக்க உதவும் .
  • அரிசி ரவை பதத்தை விட சற்று மைய அரைக்கவும் .
  • பிறகு உளுந்து மாவு இருக்கும் அதே பாத்திரத்தில் எடுத்து இரண்டு மாவைவும் கைகளால் நன்கு கலக்கவும் .அதை ஒரு பத்திரத்தில் மாற்றி ,8 -10 மணி நேரம் புளிக்க விடவும் .நடுவில் அதை கிளற கூடாது .
  • மாவு புளித்ததும் பொங்கி வரும் .அப்போது மாவை அதிகம் கிளறாமல் ஒரு பக்கமாகவே மாவை  எடுத்து ,இட்லி தட்டில் ஊற்றி 10-15 நிமிடங்கள் வேகவிட்டு ,எடுக்கவும் .
  • அவ்வளவுதான் சுவையான ,மிருதுவான இட்லி தயார் .
  • கவனிக்க:  

உளுந்து நன்கு மைய வேண்டும். எடுக்கும் போது பஞ்சு போல பந்து பந்தாக  வரவேண்டும் .
கிரைண்டரில் அரைத்தால் தான் இட்லி மிருதுவாக கிடைக்கும் .
புளித்த மாவை அதிகம் கிளறி விட்டால் கல் போன்ற இட்லி தான் கிடைக்கும்.

பிரிட்ஜில் இருந்து மாவை எடுத்த உடனே இட்லி ஊற்றக்கூடாது .இட்லி தட்டில் மாவை வைத்துகரண்டியால்  தட்ட கூடாது .தட்டாமல் கரண்டி மாவை அப்படியே ஊற்றவும் .
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதித்த பின் இட்லி தட்டை வைத்து மூடி வேக விடவும் .
சில இட்லி தட்டில் மிகவும் குழியான வட்டங்கள்  இருக்கும் அதில் ஊற்றும் இட்லி கல் போல தெரியலாம் .இட்லி குழிகள் மிகவும் குழியாக இல்லாமல் ,சிறிது ஏந்தலாக இருந்தால் மிருதுவாக , சாப்பிட எளிதாக இருக்கும் .
அரிசி அரைக்கும் போது கால் கப் சாதமும் (அன்றைய சாதம் தான் சேர்க்க வேண்டும் . முதல் நாள் செய்தது இல்லை  )சேர்த்து , அரைத்தால் மிக மிக மிருதுவான இட்லி கிடைக்கும் .எந்த பயமும் இல்லாமல் இதை செய்யலாம் 
இவற்றை கவனித்தாலே போதும் ,மிருதுவான இட்லி உங்கள் கையில் ...

7 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...