மிகவும் சுலபமான பொரியல் இது .. சுவையும் நிச்சயம் உங்களை கவரும் ..சத்தானதும் கூட....
தேவையான பொருட்கள் :
உருளைகிழங்கு - 2
பட்டாணி - 1/2 கப்
பூண்டு - 4(அ)5
மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் -கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு .
செய்முறை :
- முதலில் உருளைக்கிழங்கையும் ,பட்டாணியும் உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் .
- ஆறிய பின் உருளைகிழங்கை துண்டுகள் போடவும் . பூண்டை தட்டி எடுத்துக்கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு , அதில் தட்டிய பூண்டை போடவும் . அதனுடன் மிளகாய்த்தூள் ,மஞ்சள் தூள் ,மிக சிறிது உப்பு (உருளைகிழங்கை வேகவைக்கும்போது சேர்த்து விட்டதால் ,சிறிது மட்டும் சேர்க்கவும் )
- பிறகு இதனுடன் ,வேகவைத்த உருளைக்கிழங்கையும் ,பட்டாணியும் சேர்த்து சிம்மில் வைத்து கிளறி ,1 நிமிடம் வைத்து இறக்கவும் .
- சுவையான மணமான உருளைக்கிழங்கு பட்டாணி பொரியல் தயார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....