புதன், 19 மார்ச், 2014

மட்டன் குழம்பு (mutton kuzhambu)

மண் சட்டியில் வைக்கும் மட்டன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும் . எங்கள் வீட்டில் மண்சட்டியில் தான் மட்டன் குழம்பு செய்வோம் ..இதே போல மட்டன் கிரேவியும் சுவையானது அதை பார்க்க இங்கே கிளிக் செய்யவும் .எப்படி செய்வதுன்னு பார்க்கலாம் வாங்க..

தேவையான  பொருட்கள் :

மட்டன் - 1/2 கிலோ 
இஞ்சி -1 துண்டு (இரண்டு விரல் அகலம் இருக்கலாம் .அதை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும் ) 
 சின்ன வெங்காயம் - 15 
உருளை -2 
தக்காளி -1 
மிளகாய்த்தூள் -1 மற்றும் 1/2 ஸ்பூன் 
மல்லித்தூள் -1 ஸ்பூன் 
மஞ்சள்தூள் -1/2 ஸ்பூன் 
மிளகுதூள் -1/2 ஸ்பூன் 
கரம் மசாலாத்தூள் -கால் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 

தாளிக்க :

பட்டை -1 சிறிய துண்டு 
கிராம்பு -1 
ஏலக்காய் -1
பிரிஞ்சி இலை - 1
சிறிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது )
கருவேப்பில்லை -1 கொத்து 

அரைக்க :

தேங்காய் - 4 துண்டுகள் 
முந்திரி - 3 
சோம்பு - 1/2 ஸ்பூன் 
பூண்டு - 2 

செய்முறை :

  • முதலில் மட்டனை சுத்தம் செய்து , அரைத்த இஞ்சி,மஞ்சள் தூள் ,உப்பு  சேர்த்து ,அரிசி கழுவிய தண்ணீர் 4 கப் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் . 
  • இந்த வேகவைத்த தண்ணீரை,மிளகுத்தூள் ,சீரகத்தூள் சேர்த்து  சூப் போலவும் குடிக்கலாம் . மீதியை சமைக்கவும் வைத்துக்கொள்ளாம் .
  • பிறகு ஒரு மண் சட்டியில் (வேறு பாத்திரம் கூட உபயோகிக்கலாம் .உங்கள் விருப்பம் )வேகவைத்த தண்ணீருடன் சேர்த்த மட்டன் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து , கொதிக்க விடவும் .
  • கொதி வந்ததும் ,வெங்காயம் ,தக்காளி ,உருளைகிழங்கு  மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,மஞ்சள்தூள்,மிளகுத்தூள்,உப்பு,கரம்மசாலா தூள் சேர்த்து மூடி 10நிமிடங்கள் வேகவிடவும் .
  • பிறகு ஒரு முறை கிளறி விட்டு மீண்டும் மூடி 5 நிமிடங்கள் வேகவிடவும் .
  • பிறகு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து அதை குழம்பில் சேர்த்து ,5 நிமிடங்கள் கொதிக்க விடவும் .
  • இதனுடன் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து ,அந்த விழுதையும் சேர்த்து ,கொதிவந்ததும் இறக்கிவிடவும் .
  • அவ்வளவுதான் சுவையான ,மணமான மட்டன் குழம்பு தயார் . 

3 கருத்துகள்:

  1. asathal mutton kuzhambu Sangeetha, paarthavudaney sapidanum pola irrukku

    பதிலளிநீக்கு
  2. வரும் ஞாயிறு அன்று உங்கள் செய்முறை குறிப்பின்படி செய்து பார்க்கிறோம்... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. priya வருகை தந்து ,கருத்தை அளித்தமைக்கு மிக்க நன்றி மா ..
    தனபாலன் சகோ ...நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் .செய்து பாருங்க ..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...