செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

சுரைக்காய் கூட்டு (bottle gourd koottu)

சுரைக்காய்  கூட்டு 




தேவையான பொருட்கள் :
சுரைக்காய்   - 1 கப் 
வேகவைத்த பாசிபருப்பு  -1 கப் 


சிறிய வெங்காயம் - 5
தக்காளி (சிறியது )-1
பூண்டு -5 பல் 
மஞ்சள் தூள் -சிறிது 
உப்பு -தேவையான அளவு 
மல்லி தழை -சிறிதளவு 

அரைக்க:
தேங்காய் -3 துண்டுகள்
பச்சை மிளகாய் -2 (அ) 3 (உங்கள் காரத்திற்கு ஏற்ப )
சீரகம்-1 ஸ்பூன்

தாளிக்க:
எண்ணெய் -தேவையான அளவு 
கடுகு -1 ஸ்பூன் 
வர மிளகாய் -1
பெருங்காயம் -1 சிறிது 
கருவேப்பிலை- தேவையான அளவு 


செய்முறை :

முதலில்  பாசிபருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து கொள்ளவும் 

சுரைக்காயை  சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். அதே போல வெங்காயம்,தக்காளி  ,பூண்டு 3 இவற்றை சிறு சிறு துண்டுகளாக  நறுக்கவும் .....


அரைக்க வேண்டியவற்றை அரைத்து கொள்ளவும்...


அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து  அதில் வேகவைத்த  பாசிபருப்பை  சிறிது தண்ணீர் சேர்த்து  கொதிக்க விடவும்


பின்பு ஒரு கொதி வந்ததும் ,வெங்காயம்,தக்காளி ,பூண்டு இவற்றை சேர்த்து  வேக விடவும் ..

அத்துடன் சுரைக்காயும் சேர்த்து   மூடி போட்டு வேக விடவும்....



சுரைக்காயும் ,மற்ற பொருட்களும் வெந்த உடன்,  அரைத்த விழுதை அதில் சேர்த்து கொதிக்க விடவும்....



இப்போது அடுப்பில் கடாயை வைத்து ,தாளிக்க வேண்டிய பொருட்களை  தாளிக்கவும்....


தாளித்தவற்றை  கொதிக்கும் கூட்டில்  கொட்டி கொதிக்க விடவும் ...

சிறிது கொதித்தும்  அடுப்பை அனைத்து  ,வேறு பாத்திரத்தில் மாற்றி  மல்லி தழை சேர்த்து அலங்கரிக்கவும்... 

இப்போது சுவையான ,ஆரோக்யமான ,சுரைக்காய் கூட்டு தயார் ....

சுரைக்காய்,பாசிபருப்பு  இரண்டுமே  உடலுக்கு மிகவும் நல்லது ...

அனைத்து வயதினருக்கும் ,கர்ப்பிணிகளுக்கும் இந்த கூட்டு நல்லது...
  
sending this to : 
http://nandooskitchen.blogspot.in/2014/01/south-indian-cooking-event.html?showComment=1390028986183
http://anuzhealthykitchen.blogspot.in/2012/07/south-indian-kitchen-series-event-1.html






2 கருத்துகள்:

  1. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.அருமையான குறிப்பு.
    http://saraniyapt.blogspot.in/2013/05/roundup-of-my-first-event-and-winner.html#axzz2Si4HjRg7
    check here.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மேலான வருகைக்கு நன்றி.. எனது ரெசிபியை தேர்ந்தெடுத்தமைக்கு என் கோடான கோடி நன்றிகள்

      நீக்கு

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...