செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

ஈஸி &ஹெல்தி வெஜிடபிள் சாலட்


தேவையான பொருட்கள் 
கேரட் -1 
வெண்டைக்காய்-2
முட்டை கோஸ்- சிறிது 
வெங்காயம் (சிறியது )-2
பீட்ரூட் -சிறிது 
மாங்காய் துருவியது -சிறிது (அதிகம் சேர்த்தால் புளிக்கும் )
புதினா-சிறிது 
மிளகுத்தூள் -தேவைக்கு ஏற்ப 
உப்பு -1 பின்ச் 

குறிப்பு :உங்கள் தேவைக்கு ஏற்ப காய்கறிகளை கூட்டியோ ,குறைத்தோ சேர்க்கலாம் ...


செய்முறை :
காய்கறிகள் அனைத்தையும் சிறுது சிறிதாக ,நறுக்கி கொள்ளவும்....










மல்லி,மற்றும் புதினாவையும் நறுக்கி கொள்ளவும் ....












ஒரு பாத்திரத்தில் ,நறுக்கிய எல்லா காய்கறிகள்,நறுக்கிய புதினா ,மல்லிதழை  சேர்த்து , உப்பு ,மிளகுதூள் சேர்த்து  கிளறவும் ...
பின்னர் அதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி ,உங்கள் அன்புக்குறியவர்களுக்கு பரிமாறவும்....


இதனுடன் ,முள்ளங்கி (சிறிது ),தக்காளியும் சேர்க்கலாம் ...இங்கே நான் இவற்றை விரும்பாததால் சேர்க்க வில்லை ...வெள்ளரி சேர்த்தால் சுவையாக இருக்கும்...ஆனால் இப்போது கிடைக்கவில்லை ...
 இது சுவையானது மட்டும் அல்ல.. சத்தான,ஈசியானதும் கூட.. குழந்தைகள் முதல் பெரியவர்வரை 
எல்லோருக்கும் ஏற்ற உணவு இது ...
  sending this to :




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Enjoy this page? Like us on Facebook!)