தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு -1/2 கப்
மைதா - 1/2 கப்
வெண்ணை - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் -1/2 ஸ்பூன்
பூண்டு விழுது -1 ஸ்பூன்
சீரகம் - கால் ஸ்பூன்
எள் -கால் ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -பொரிக்க
செய்முறை :
- முதலில் மிளகாய் தூளை 2 ஸ்பூன் தண்ணீரில் கரைக்கவும் .இப்படி செய்வதால் மாவின் எல்லா இடங்களிலும் சீராக இருக்கும்
- பிறகு எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் ,சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவும் .
- அப்படியே பத்து நிமிடங்கள் விடவும் .
- அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ,பின் ஒவ்வொரு உருண்டையும் மிகவும் மெலிதாக,சப்பாத்தி போல உருட்டவும்
- அதை டைமண்டு வடிவில் ஒரு கத்தியை வைத்து வெட்டி ,அதை எண்ணையில் பொரித்து எடுக்கவும் .
- சுவையான கோதுமை ,மைதா கார பிஸ்கட் தயார் .
- sending this to :
Super sangeetha, daily asathureenga,... love that it is perfectly cooked and all crunchy...Thanks a lot dear for linking it to the CWS event waiting for more lovely entries from you....
பதிலளிநீக்குhe hee...thanks a lot dear...
பதிலளிநீக்கு