சனி, 25 அக்டோபர், 2014

சிக்கன் பிரியாணி /chicken biryani


ரொம்ப நாளா போடணும்னு நினைத்த ரெசிபி  இது .நேரமின்மையால போட முடியல . இந்தியாவின் மிக பெரிய  உணவின் அடையாளமாய் திகழும் பிரியாணி ரெசிபி இதோ 

தேவையான பொருட்கள் :

பிரியாணி அரிசி - 1 டம்ளர் 
சிக்கன் -300 கிராம் 
பல்லாரி - 2 
தக்காளி - 1  
புதினா ,மல்லிதழை - கொஞ்சம் 
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன் 
தயிர் - 2 ஸ்பூன் 

தாளிக்க :

நெய் - 5 ஸ்பூன்  
பட்டை - 1 
கிராம்பு - 1
பிரிஞ்சி இலை - 1 
ஏலக்காய் - 1
பூண்டு - 2 (தட்டியது )
சோம்பு - 1 ஸ்பூன் 

அரைக்க :


இஞ்சி - 25  கி 
பச்சைமிளகாய் - 4  
பூண்டு - 25 

செய்முறை :

  • முதலில் அரைக்க வேண்டிய பொருட்களில் இஞ்சி பூண்டு தனியாக அரைத்து அதில் 1 ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது தனியே எடுத்து வைக்கவும் . மீதி இருக்கும் இஞ்சி பூண்டு விழுதுடன் பச்சைமிளகாயும் சேர்த்து அரைத்து வைக்கவும் .
  • சிக்கனை சுத்தம் செய்து அதனுடன் இஞ்சிபூண்டுபச்சைமிளகாய் விழுது , மஞ்சள்தூள் ,தயிர் ,உப்பு சேர்த்து பிசறி  2 மணிநேரம் ஊற வைக்கவும் .(இப்படி செய்வதால் சிக்கனுடன் மசாலா ,உப்பு ,காரம் ஏறி சுவையாக இருக்கும் .)
  • பின்பு குக்கரை வைத்து அதில் சிறிது நெய் விட்டு , தாளிக்க வேண்டிய பொருட்களை தாளிக்கவும் .
  • அதனுடன் பல்லாரி ,இஞ்சிபூண்டு விழுது , சேர்த்து வதக்கவும் .
  • வெங்காயம் வதங்கியதும் ,தக்காளி சேர்த்து வதக்கவும் .
  • அதனுடன் மல்லி ,புதினா ,ஊறவைத்த சிக்கன் துண்டுகள் ,உப்பு சேர்த்து நன்கு கிளறவும் .
  • இதனுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து ,கொதிக்க விடவும் . உப்பு ,காரம் சரி பார்க்கவும் .
  • இதனுடன் பிரியாணி அரிசியும் சேர்த்து கிளறி ஒரு கொதி கொதிக்கவிட்டு ,1 ஸ்பூன் நெய் விட்டு (இப்படி செய்வதால் குக்கரில் சாதம் ஒட்டாது .குக்கரை மூடி வெய்ட் போட்டு  சிம்மில் 10 நிமிடங்கள் வைக்கவும் .
  • 10 நிமிடம் கழித்து ,அடுப்பை நிறுத்தி விடவும். உடனே திறக்க கூடாது . 
  • 1 மணிநேரம் கழித்து குக்கரை திறந்து ,மேலும் சில புதினா ,மல்லிதழை ,எலுமிச்சை சாறு விட்டு  மேல் உள்ள சாதம் கீழும் கீழே உள்ள சாதம் மேலும் வருமாறு கிளறி விடவும் .
  • சிறிது நேரம் கழித்து பரிமாறலாம் . மிகவும் சுவையான ,மணமான கவர்திழுக்கும் சிக்கன் பிரியாணி தயார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...