சனி, 2 ஆகஸ்ட், 2014

இறால் மிளகு வறுவல் (prawn pepper fry )

இறால் மிளகு வறுவல் ஒரு தடவை செய்து பாருங்க .மீண்டும் மீண்டும் செய்துகிட்டே இருப்பீங்க .....


தேவையான பொருட்கள் :

இறால் - 1/2 கி 
வெங்காயம் - 2 
தக்காளி - 1 (பெரியது )
இஞ்சி ,பூண்டு விழுது -  1 ஸ்பூன் 
மிளகுப்பொடி - 2 ஸ்பூன் (உங்கள் காரத்துக்கு ஏற்ப )
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
உப்பு - தேவைக்கு 

தாளிக்க :
 கடுகு - 1/4 ஸ்பூன் 
பட்டை - 1 
கிராம்பு - 1 
பிரிஞ்சி இலை - 1
சீரகம் - 1/4 ஸ்பூன் 
சோம்பு - 1/4ஸ்பூன் 
கருவேப்பிலை - 2 கொத்து 
எண்ணெய் - தாளிக்க 

செய்முறை :

  • முதலில் எண்ணெய் விட்டு , தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும் .
  • பிறகு வெங்காயம் மிக பொடியாக நறுக்கி யது சேர்த்து வதக்கவும் . வெங்காயம் பொன் நிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கி ,அதனுடன் மிளகுத்தூள்,மல்லித்தூள் ,மஞ்சள்தூள் , மிளகாய்த்தூள் ,உப்பு சேர்த்து வதக்கவும் 
  • இப்போது அதனுடன் இறால் சேர்த்து மூடி , அவ்வப்போது கிளறி விடவும் . தண்ணீர் சேர்க்க வேண்டாம் . இறால் தண்ணீர் விடும் என்பதால் , தேவைப்பட்டால் தெளித்துக்கொள்ளலாம் .
  • நீர் சுண்டி நன்கு வெந்ததும் , மூடி இல்லாமல் வேகவிடவும் . அவ்வப்போது கிளறி விடவும் .நன்கு இறால் வெந்து சுருண்டு வந்த பதத்தில் இறக்கி  சூடாக பரிமாறவும் .
  • சுவையான மிளகு இறால் வறுவல் தயார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...