செவ்வாய், 17 ஜூன், 2014

முட்டைகோஸ் பொரியல் (Cabbage poriyal )

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு என் வலைப்பக்கம் எட்டி பார்க்கிறேன் .. . இன்னைக்காவது ஒரு post போடலாம்னு வந்து இருக்கேன் ..இடைவெளிக்கு மன்னிக்கவும் .இந்த முட்டைகோஸ் பொரியல் 
மிக சுலபமானது ...செய்முறை விளக்கம் இதோ ...

தேவையான பொருட்கள் :

முட்டைகோஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது )
பாசி பருப்பு - 3  ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கடுகு - கால்  ஸ்பூன்
உளுந்தபருப்பு - கால் ஸ்பூன்
வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது )
கருவேப்பிலை - 1 கொத்து

செய்முறை :

  • முதலில் முட்டைகோஸ் ,உப்பு , பாசிபருப்பு,சிறிது தண்ணீர்  சேர்த்து வேக வைத்து எடுத்துக்கொள்ளவும் .
  • பிறகு வாணலில் எண்ணெய் விட்டு , கடுகு ,உளுந்தம்பருப்பு ,பச்சைமிளகாய் , வெங்காயம் , கருவேப்பிலை இவற்றை சேர்த்து தாளித்து ,வேகவைத்த முட்டைகோஸ் ,பாசிபருப்பு கலவையை அதில் சேர்த்து கிளறவும் .
  • விருப்பப்பட்டால் , தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கலாம் . 
  • அவ்வளவுதான் சுலபமான ,சுவையான முட்டைகோஸ் பொரியல் தயார் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...