மிகவும் சுவையான , நாவூற வைக்கும் ஊறுகாய் இது.. இந்த ஊறுகாய் எங்கள் மதிய உணவை மேலும் ருசியாக்கியத்தில் சந்தேகமே இல்லை .
தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய் - 10
வெந்தயம் - 2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள்- 5 ஸ்பூன்
பெருங்காயம் - 1/ 2 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன் +1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
செய்முறை ;
- முதலில் நெல்லிகாயை சுத்தம் செய்து , ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து ,அதனுடன் மஞ்சள்தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வேகவைக்கவும் .(அதற்கு மேல் வேகவைக்க வேண்டாம் )
- பிறகு நெல்லிக்காயை உலர விட்டு , அதை படத்தில் உள்ளது போல துண்டுகள் போடவும் .(நாம் விரலை நெல்லிக்காயின் மேல் பக்கம் வைத்து அழுத்தினால் அதன் துண்டுகள் எளிதாக பிரியும் .)
- பிறகு ஒரு வெற்று வாணலில் வெந்தயத்தையும் ,1 ஸ்பூன் கடுகையும் சேர்த்து வறுத்து ஆறிய பின் , பொடித்துக்கொள்ளவும் .
- வாணலில் எண்ணெய் விட்டு , அதில் 1ஸ்பூன் கடுகு சேர்த்து ,அதனுடன் பெருங்காயம் சேர்க்கவும் .
- அதனுடன் மஞ்சள்தூள் ,சிறிது உப்பு ,சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும் .
- இதனுடன் வேகவைத்து ,துண்டுகள் செய்த நெல்லிக்காயை சேர்த்து நன்கு கிளறவும் .
- 5 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கி , ஆறவிட்டு காற்று புகாத பாத்திரத்தில் மாற்றி வைக்கவும் .
- ஒவ்வொரு முறையும் புதிதான ஸ்பூன் உபயோகிக்கவும் .
- நெல்லிக்காய் வைட்டமின் c அதிகம் உள்ளத்தால் மிகவும் நல்லது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....