திங்கள், 22 ஜூன், 2015

மாங்காய் பச்சடி/mango pachadi

மாங்காய் பச்சடி குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமானது .ஒரு முறை சுவைத்தால் கண்டிப்பாக மனதில் நிற்கும் இதன் சுவை ...

தேவையான பொருட்கள் :

மாங்காய் -1
வெல்லம் - 5 ஸ்பூன் (பொடித்தது  )
உப்பு - சிறிது 

தாளிக்க :

உளுந்தம்பருப்பு - 1ஸ்பூன் 
மிளகாய் - 1

செய்முறை :

  • மாங்காயை வாழைக்காய் செத்துவது போல ,செத்திக்கொள்ளவும் .
  • அதனை சிறிது நீர்,உப்பு  சேர்த்து ,வேக விடவும் .
  • வெந்ததும் தனியே வைத்து ஆற விடவும் .நீர் அதிகம் இருந்தால் வடிகட்டி தனியே வைக்கவும் .(குறைவான நீர் சேர்த்தால் சிறப்பு )சூடாக இருக்கும் போதே அதில் வெல்லத்தை சேர்க்கவும் .
  • masher அல்லது மத்து கொண்டு கடைந்து கொள்ளவும் .கடைசியாக தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து ,பச்சடியில் கொட்டி ஒரே ஒரு சுற்று கடைந்து கிண்ணத்தில் மாற்றி வைக்கவும் .
  • மீதம் நீர் இருந்தால் அதை கடைந்த பாத்திரத்தில் ஊற்றி அலசி பச்சடியில் சேர்க்கலாம் .
  • மிளகாய் மற்றும் வெல்லம் உங்கள் சுவைக்கு ஏற்ப கூட்டியோ ,குறைத்தோ செய்யலாம் .
  • இதை குழந்தைகள் சும்மாவே சாப்பிட விரும்புவார்கள் .மதிய உணவில் சைட் டிஷ் ஆக இதை தொட்டு கொள்ளலாம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...