செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

கீரைத்தண்டு பொரியல் /amarnath leaves curry /thandukeerai poriyal

இன்று தண்டு கீரை வாங்கியதில் ,நிறைய இருந்ததால், கொஞ்சம் தனியாக எடுத்து வைத்து பொரியல் செய்தேன் . மிகவும் சுலபமான பொரியல் இது ... 

தேவையான பொருட்கள் :

தண்டு கீரை - தண்டுப்பகுதி (வேண்டுமானால் இலை பகுதியும் கூட சேர்த்துக்கொள்ளலாம் 
காய்ந்த மிளகாய் - 1 
உளுந்தம்பருப்பு - 1/2 ஸ்பூன் 
உப்பு - தேவைக்கு 
எண்ணெய் - சிறிது 

செய்முறை :

  • முதலில் கீரையை சுத்தம் செய்து ,தண்டின் நார் எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும் .
  • கடாயில் எண்ணெய் விட்டு ,  2,3 துண்டுகளாக வெட்டிய மிளகாய்,உளுந்தம்பருப்பு ,கீரைத்தண்டு சேர்த்து கிளறவும் .
  • இதனுடன் சிறிது  உப்பு , கொஞ்சம் தண்ணீர் தெளித்து , வேகவிடவும் 
  • கீரை வெந்ததும் , இறக்கி பரிமாறலாம் .
  • தேங்காய் துருவல் இதில் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும் . என்னிடம் இல்லை என்பதால் நான் சேர்க்கவில்லை ..

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...