ரொம்ப ரொம்ப ஈஸியா குழந்தைங்க லஞ்ச் பாக்ஸ்க்கு செய்ய ஒரு சாதம் தான் இந்த பூண்டு நெய் சாதம் இதுக்கு ஸைட் டிஷ் ஆக பன்னர்,tofu கிரேவி ,சிக்கன் கிரேவி லாம் சேர்த்து சாப்பிட்டா வேற லெவல் டேஸ்ட்
தேவையான பொருட்கள் :
நெய் - 2 ஸ்பூன்
எண்ணைய் - 2 ஸ்பூன்
பூண்டு -2 கட்டி
ஏலக்காய் - 5
பச்சை மிளகாய் -3
புதினா -சிறிது
சீராக சம்பா அரிசி - 2 கப்
தண்ணீர் - 3 கப் (1 கப் அரிசி- 1 1/2 கப் ) 1/4 கப் எக்ஸ்ட்ரா சேர்க்கவும்
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை ஜூஸ் - 1/2 மூடி
செய்முறை:
- முதலில் அடிக்கானமான கடாய் எடுத்து , அதில் நெய் - 2 ஸ்பூன்
எண்ணைய் - 2 ஸ்பூன் ஊற்றவும்
- பின் பூண்டு -2 கட்டி உரித்து நன்கு தட்டி எடுத்துக்கொள்ளவும் அதை கடாயில் சேர்த்து , சிவக்கும் வரை வதக்கவும் .
- பின் ஏலக்காய் - 5 சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய் -3
புதினா -சிறிது சேர்த்து வதக்கவும் . - இதில் சீராக சம்பா அரிசி - 2 கப் சேர்த்து வர்க்கவும், நிறம் மாறும் வரை வதக்கவும் .
- இதனுடன் 3 கப் தண்ணீர்,உப்பு சேர்த்து, மூடி போட்டு கொதிக்க விடவும்
- தண்ணீர் சுண்டியதும் எலுமிச்சை ஜூஸ் - 1/2 மூடி சேர்த்து ,கிளறி தம் போட்டு ,10 நிமிடங்கள் வைத்து ,அடுப்பை அனைத்து பின் 10 நிமிடங்கள் அப்படியே விடவும் .
- சூடாக பரிமாறவும். சுவையான பூண்டு நெய் சாதம் தயார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....