நெய் டாட்காம், பிரிஞ்சி சாதம் , சப்பாத்தி ,இட்லி ,தோசைக்கு ஏற்ற சைட் டிஷ் இந்த கடாய் டோஃபு. டோஃபுகக்கு பதிலாக பன்னீர் வைத்தும் செய்யலாம்
தேவையான பொருட்கள் :
கலந்து வைக்க :
- டோஃபு(அ)பன்னீர் -1 பாக்கெட்
- குடை மிளகாய் - 1 (சதுரமாக வெட்டியது )
- பெரிய வெங்காயம்- 1 (சதுரமாக வெட்டியது )
- மிளகாய் தூள் -1 ஸ்பூன்
- கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
- தனியா தூள் - 1/4 ஸ்பூன்
- உப்பு - தேவைக்கு
வதக்க :
எண்ணைய் - 4 ஸ்பூன்
சீரகம் -1/4 ஸ்பூன்
மிளகு - 1/4 ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
பெரிய வெங்காயம் - 2 ( பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் -2
இஞ்சி பூண்டு -1/2
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
தனியாதூள் - 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
அரைத்த தக்காளி -1
செய்முறை :
- கலந்து வைக்க கொடுத்துள்ள பொருட்களை கலந்து வைக்கவும்
- 4 ஸ்பூன் எண்ணைய் விட்டு ,அவற்றை வதக்கவும்.
- பின் வதங்கிய வற்றை தனியாக எடுத்து ,அதே காடாயில் ,வதக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து , வதக்கவும் ,நன்கு வதங்கியதும் அதில் வதக்கி , தனியே எடுத்து வைத்த டோஃபு கலவையை சேர்த்து ,எண்ணை பிரிந்து வந்ததும் இறக்கி பரிமாறவும் .
- சுவையான , காடாய் டோஃபு தயார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....