recipe லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
recipe லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 அக்டோபர், 2024

kadai tofu | கடாய் டோஃபு

நெய் டாட்காம், பிரிஞ்சி சாதம் , சப்பாத்தி ,இட்லி ,தோசைக்கு ஏற்ற சைட்  டிஷ் இந்த கடாய் டோஃபு. டோஃபுகக்கு பதிலாக பன்னீர் வைத்தும் செய்யலாம்   

தேவையான பொருட்கள் :

கலந்து வைக்க :

  • டோஃபு(அ)பன்னீர்  -1 பாக்கெட் 
  • குடை மிளகாய் - 1 (சதுரமாக வெட்டியது )
  • பெரிய வெங்காயம்- 1 (சதுரமாக வெட்டியது )
  •  மிளகாய் தூள் -1 ஸ்பூன் 
  • கரம் மசாலா - 1/4 ஸ்பூன் 
  • தனியா தூள் - 1/4 ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு  

வதக்க :

எண்ணைய் - 4 ஸ்பூன்
சீரகம் -1/4 ஸ்பூன் 
மிளகு - 1/4 ஸ்பூன் 
பிரிஞ்சி இலை - 1 
பெரிய வெங்காயம் - 2 ( பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் -2 
இஞ்சி பூண்டு -1/2 
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் 
தனியாதூள் - 1/2 ஸ்பூன் 
கரம் மசாலா - 1/4 ஸ்பூன் 
உப்பு - தேவைக்கு 
அரைத்த தக்காளி -1 

செய்முறை :

  • கலந்து வைக்க கொடுத்துள்ள பொருட்களை கலந்து வைக்கவும் 
  • 4 ஸ்பூன் எண்ணைய் விட்டு ,அவற்றை வதக்கவும்.  
  • பின் வதங்கிய வற்றை தனியாக எடுத்து ,அதே காடாயில் ,வதக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன்  பின் ஒன்றாக சேர்த்து , வதக்கவும் ,நன்கு வதங்கியதும் அதில் வதக்கி ,  தனியே எடுத்து வைத்த  டோஃபு  கலவையை சேர்த்து ,எண்ணை பிரிந்து வந்ததும் இறக்கி பரிமாறவும் .
  •   சுவையான ,   காடாய்  டோஃபு  தயார் 
   

 

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

மஷ்ரூம் 65/mushroom 65


மஷ்ரூம்  65 அசைவ பிரியர்களுக்கு ஏற்ற சைவ உணவு ஆகும்.
சிக்கனை போன்ற சுவையோடு இருப்பதால்குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் . 

தேவையான பொருட்கள்: 

மஷ்ரூம்-1/2 கி
எண்நெய்-பொரிக்க
உப்பு-தேவையான அளவு
மைதா - 1 மற்றும் 1/2 ஸ்பூன்
கார்ன் ப்ளோர்-1 மற்றும் 1/2 ஸ்பூன்
அரிசி மாவு- 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
கரம் மசாலா - 1/4 ஸ்பூன் 
சிக்கன் 65 மசாலா - 1/2 ஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் 

செய்முறை :

  • முதலில்  மஷ்ரூமை நன்கு சுத்தம் செய்து செய்து , நறுக்கி வைக்கவும் 
  • பின் இதனுடன் எண்ணெய் தவிர , மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும் .
  • பின் இதனை சிறிது தண்ணீர் தெளித்து (நிறைய சேர்க்க கூடாது ) கிளறி 10 நிமிடம்  வைக்கவும் .
  • எண்ணெய் சூடாக்கி ,அதில் கிளறி வைத்த மஷ்ரூமை உதிர்த்து பொரித்து எடுக்கவும் .
  • நான் இங்கு ,கலர் பவுடர் சேர்க்க வில்லை .தேவைப்பட்டால் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம் .
  • அவ்வளவுதான் சுவையான ,மணமான , மஷ்ரூம் 65 தயார் .

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

மசாலா பூரி /masala poori

 வீதியில் விற்கும் பூரியை  எனது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .. வீட்டில் அதைப்போல முயற்சித்தது இந்த மசாலா பூரி .. இப்போது எல்லாம் இதை  வீட்டிலேயே இதை  சாப்பிட  கேட்கிறார்கள் 

வியாழன், 19 அக்டோபர், 2017

கருவேப்பிலை குழம்பு /curry leaves kulambu

மிகவும் எளிதான சுவையானது இந்த குழம்பு . உடலுக்கு மிகவும் ஏற்றது . சளி இருமலுக்கு மிகவும் நல்லது ..... 

தேவையான பொருட்கள் :

கருவேப்பிலை - 3/4 கப் 

பூண்டு - 10 பல் 

புளி- நெல்லிக்காய் அளவு
வறுத்து அரைக்க :

காய்ந்த மிளகாய் - 4

வெந்தயம் - 1/4 ஸ்பூன் 

மல்லி - 1/ 4 ஸ்பூன் 

க.பருப்பு - 1ஸ்பூன் 

உ.பருப்பு - 1 ஸ்பூன்

தாளிக்க :

 கடுகு -1 ஸ்பூன் 

வெந்தயம் - 1/4 ஸ்பூன் 

உ . பருப்பு - 1/2 ஸ்பூன் 

ந.எண்ணெய் - தேவைக்கு 

செய்முறை :

  • முதலில் வறுத்து அரைக்க வேண்டியவற்றை வறுத்து அதனுடன் கருவேப்பிலை சேர்த்து  அரைத்துக்கொள்ளவும் .
  • பூண்டு , கருவேப்பிலையை சுத்தம் செய்து வைக்கவும் .
  • பின் கடாயில் எண்ணெய் விட்டு ,அதில் கடுகு ,உ.பருப்பு , வெந்தயம் சேர்த்து தாளித்து ,பூண்டையும் சேர்த்து வதக்கவும் .
  • பின் இதனுடன் புளி கரைசல், அரைத்த விழுது சேர்த்து  15 நிமிடங்கள் கொதிக்க விடவும் ..
  • மணமணக்க கருவேப்பிலை குழம்பு தயார் ... சூடான சாதத்துடன் பரிமாறவும் .

ஞாயிறு, 29 மே, 2016

தாளித்த இடியாப்பம்/lemon idiyappam

இடியாப்பம் செய்யும் போது ,இடியாப்பமும் ,தேங்காய்பால் அல்லது சட்னியும்  செய்வோம்.சிலருக்கு அது பிடிக்காது .எனவே இது போல செய்து கொடுக்கலாம். எங்கள் வீட்டில் இரண்டுமே செய்வோம் . அவரவர் விருப்பம் போல இதை சாப்பிடலாம் .இதேபோல
இடியாப்பம் மீந்து விட்டால் கூட இப்படி தாளித்து செய்யலாம்.


தேவையான பொருட்கள்:
இடியாப்பம்-1கப் (ஆறவிட்டு உதிர்த்தது)
கடுகு-1/4ஸ்பூன்
கடலை பருப்பு-1/2 ஸ்பூன்
உ.பருப்பு -1/2ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் -
கருவேப்பிலை -1கொத்து 
உப்பு-தேவைக்கு 
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன் 
எலுமிச்சை சாறு -2ஸ்பூன்

செய்முறை:
•இடியாப்பம் செய்து ஆறவிட்டு ,உதிர்க்கவும் 
• வாணலில் எண்ணெய் விட்டு ,கடுகு ,உளுந்து ,கடலை பருப்பு ,கருவேப்பிலை சேர்க்கவும் 
• இதனுடன் மஞ்சள்தூள்,உப்பு,சேர்த்து கிளறவும் 
•இதனுடன் உதிர்த்த இடியாப்பம் சேர்த்து கிளறவும்.
• பின் எலுமிச்சை சாறு கலந்து இறக்கி , சூடாக பரிமாறவும் 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...