மிகவும் சுவையான ,சத்தான ஓட்ஸ் புட்டு ,காலை உணவுக்கு ஏற்ற புட்டு இது..
ஓட்ஸ் - 2 கப்
தேங்காய் -1/2 கப்
சர்க்கரை -3 ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - தேவையான அளவு
நெய் -2 ஸ்பூன்
முந்திரி - 6 (உடைத்துக்கொள்ளவும் )
ஏலக்காய்த்தூள் - சிறிது
- முதலில் ஓட்ஸை வெற்று வாணலில் வருத்துக்கொள்ளவும்.
- வறுத்த ஓட்ஸை மிக்சியில் பொடித்துக்கொள்ளவும் .
- ஓட்ஸ் மாவுடன் ,சிறிது தண்ணீர் ,உப்பு சேர்த்து (நிறைய சேர்க்க வேண்டாம் .கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும் )கிளறவும் .
- பிறகு , அதை இட்லி தட்டில் வைத்து ,அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து வேகவைக்கவும் .
- பிறகு அதை ஒரு பாத்திரத்தில் கொட்டி , அதில் சர்க்கரை ஏலக்காய்த்தூள்,நெய்யில் வறுத்த முந்திரியை கொட்டி கிளறி ,சூடாக பரிமாறவும் ..
உங்களின் முறைப்படி செய்து பார்ப்போம்... நன்றி...
பதிலளிநீக்குஓட்ஸ் புட்டு செய்ததில்லை. செய்துபார்க்கிறேன். நன்றி.
பதிலளிநீக்குsuper..
பதிலளிநீக்குசூப்பர் புட்டு!!
பதிலளிநீக்குதிண்டுக்கல் தனபாலன் சகோ , செய்து பாருங்க .. நல்லா இருக்கும் நன்றி ..
பதிலளிநீக்குபிரியசகி , ஓட்ஸ் புட்டு நன்றாக இருக்கும் ,செய்து பாருங்க ..வாழ்த்துக்கள் .கருத்துக்கு நன்றி .
சாரதா அக்கா , மிக்க நன்றி...
super puttu Sangeetha, will try this soon...
பதிலளிநீக்குபுதுசாக இருக்கு. செய்து பார்க்க வேண்டும்.
பதிலளிநீக்குpriya ,ஆசியா அக்கா நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் .... முயற்சி செய்து பாருங்க ..கருத்துக்கு மிக்க நன்றி ..
பதிலளிநீக்கு