ஞாயிறு, 29 மே, 2016

தாளித்த இடியாப்பம்/lemon idiyappam

இடியாப்பம் செய்யும் போது ,இடியாப்பமும் ,தேங்காய்பால் அல்லது சட்னியும்  செய்வோம்.சிலருக்கு அது பிடிக்காது .எனவே இது போல செய்து கொடுக்கலாம். எங்கள் வீட்டில் இரண்டுமே செய்வோம் . அவரவர் விருப்பம் போல இதை சாப்பிடலாம் .இதேபோல
இடியாப்பம் மீந்து விட்டால் கூட இப்படி தாளித்து செய்யலாம்.


தேவையான பொருட்கள்:
இடியாப்பம்-1கப் (ஆறவிட்டு உதிர்த்தது)
கடுகு-1/4ஸ்பூன்
கடலை பருப்பு-1/2 ஸ்பூன்
உ.பருப்பு -1/2ஸ்பூன் 
காய்ந்த மிளகாய் -
கருவேப்பிலை -1கொத்து 
உப்பு-தேவைக்கு 
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன் 
எலுமிச்சை சாறு -2ஸ்பூன்

செய்முறை:
•இடியாப்பம் செய்து ஆறவிட்டு ,உதிர்க்கவும் 
• வாணலில் எண்ணெய் விட்டு ,கடுகு ,உளுந்து ,கடலை பருப்பு ,கருவேப்பிலை சேர்க்கவும் 
• இதனுடன் மஞ்சள்தூள்,உப்பு,சேர்த்து கிளறவும் 
•இதனுடன் உதிர்த்த இடியாப்பம் சேர்த்து கிளறவும்.
• பின் எலுமிச்சை சாறு கலந்து இறக்கி , சூடாக பரிமாறவும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...