புதன், 22 ஜனவரி, 2014

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல் (sweet potato curry)

மிகவும் எளிமையானது  சுவையானது  , இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு பொரியல் .சத்தானதும் கூட ...

தேவையான பொருட்கள் :

சர்க்கரைவள்ளிகிழங்கு - 2
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம்- 4(பொடியாக நறுக்கியது )
 மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கருவேப்பிலை - 1 கொத்து

செய்முறை :

  • முதலில் சர்க்கரைவள்ளிகிழங்கை ,சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும் .
  • கடாயில் எண்ணெய் விட்டு ,கடுகு ,உளுந்து , கருவேப்பில்லை , வெங்காயம் சேர்த்து வதக்கவும் 
  • பிறகு கிழங்கை போட்டு ,மிளகாய் தூள் , மல்லித்தூள் , உப்பு , சேர்த்து , 1/2 கப் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும் 
  • தண்ணீர் சுண்டி வெந்ததும் இறக்கி பரிமாறவும் .
  • சுவையான சர்க்கரைவள்ளிகிழங்கு பொரியல் தயார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...