சனி, 30 ஆகஸ்ட், 2014

வரகு அரிசி உப்புமா/kodo millet upma/varagu arisi upma

வரகு அரிசி உப்புமா  மிகவும் சத்தானது ... சுவையானதும் கூட ...செய்வதும் சுலபம் .....

தேவையான பொருட்கள் :

வரகு அரிசி - 1 கப் 
கடுகு - 1/2 ஸ்பூன் 
கடலை பருப்பு - 1/2 ஸ்பூன் 
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 
இஞ்சி - 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது )
உப்பு - தேவைக்கு 
கருவேப்பிலை - 1 கொத்து

செய்முறை :


  •  முதலில் வாணலில் எண்ணெய் விட்டு ,கடுகு,கடலைபருப்பு ,சேர்த்து தாளிக்கவும் 
  • பின் அதில் நறுக்கிய இஞ்சி துண்டுகள்,பச்சைமிளகாய் ,கருவேப்பிலை சேர்த்து வதக்கி அத்துடன் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் .
  • வெங்காயம் கண்ணாடி போல வதங்கியவுடன் , வரகு அரிசி ,சேர்த்து அதில் 2 கப் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வைக்கவும் .
  • அவ்வப்போது கிளறி விட்டு வேக விடவும் .
  • நன்கு வெந்ததும் இறக்கி சட்னியுடன் பரிமாறவும் .

1 கருத்து:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...