கேழ்வரகு கூழ் மிகவும் சுவையானது .நமது பாரம்பரிய உணவான கூழ் இன்னைக்கு பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது என்பதே பெருமைக்குரிய விஷயம் .இதற்கு மிக பெரிய காரணம் இதன் சத்துக்கள் என்பதே மறுக்க இயலாத உண்மை ...
வழக்கமாக கூழ் செய்யும் போது பலரும் அரிசியில் செய்வார்கள் . ஆனால் நான் இதில் வரகு அரிசியை சேர்த்து செய்து பார்த்தேன் ... அருமையாக இருந்தது .
தேவையான பொருட்கள் :
ராகி மாவு / கேழ்வரகு மாவு - 1 கப்
வரகு அரிசி -1/4 கப் (நொய் அரிசி கூட உபயோகிக்கலாம் )
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1/4 கப்
வெங்காயம் -8(மிக பொடியாக நறுக்கியது )
பச்சைமிளகாய் - 1/2 (மிக பொடியாக நறுக்கியது - இதை உங்கள் காரத்துக்கு ஏற்ப கூட்டியோ ,குறைத்தோ கொள்ளலாம் )
துருவிய மாங்காய் - 3 ஸ்பூன்
செய்முறை :
- முதலில் கேழ்வரகு மாவை தோசை 2 கப் தண்ணீர் சேர்த்து ,கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும் அதை அப்படியே 8 மணி நேரம் வைக்கவும் .காலையில் ஊறவிட்டால் மதியம் செய்யலாம் .
- ஒரு அடி கனமான பாத்திரத்தில் , 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிவந்ததும் ,வரகு அரிசியை சேர்த்து வேகவிடவும் .
- இப்போது அதில் மேலும் 1 கப் தண்ணீர் ,ஊறவிட்ட ராகி மாவை சேர்த்து,மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும் .
- பிறகு கூழ் நன்கு பளபளப்பாக,கெட்டியாகி வரும் .சுமார் 20 நிமிடங்கள் ஆகலாம் .
- இப்போது இறக்கி ஆறவிடவும் . இதனை ஆறியதும் வெங்காயம் ,பச்சைமிளகாய் ,துருவிய மாங்காய் ,தயிர்,தண்ணீர் சேர்த்து ,கரைத்து பரிமாறவும் .
- இதேபோல ஆறவிட்ட கூழை , அப்படியே 8 மணி நேரம் வைத்து, பிறகு கரைத்தும் பரிமாறலாம் .இது சிறிது புளிப்பு சுவையுடன் சுவையாக இருக்கும் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....